இட்லி மாவு போண்டா (1)
1 - Excellent!
5 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்
தேவையான பொருட்கள்:
கெட்டியான இட்லி மாவு - 1 கப்
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பில்லை இலை - 4
கொத்தமல்லி இலை - சிறிதளவு
தேங்காய் - 1 துண்டு
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பில்லை மற்றும் கொத்தமல்லியினை பொடியாக வெட்டி கொள்ளவும்.
தேங்காயினை சிறிய சிறிய பல்லாக அரிந்து கொள்ளவும்.
இப்பொழுது அதனைத்து பொருட்களையும் இட்லி மாவுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் காயவைத்து இந்த கலவையினை ஒரு குழி கரண்டியில் எடுத்து எண்ணெயில் மெதுவாக போடவும்.
ஒரே சமயத்தில் கடாயில் எண்ணெயின் அளவினை பொருத்து 4 - 5 போண்டாகள் சுட்டு எடுத்து பரிமாறவும்..