இட்லி மாவு போண்டா

off off off off off 0

தேவையான பொருட்கள்:

இட்லி மாவு - 1 1/2 கப்

கடலைப் பருப்பு - 2 தேக்கரண்டி

அரிசி மாவு - 1/2 மேசைக்கரண்டி

பெரிய வெங்காயம் - 1

இஞ்சி - 1/2 அங்குலத் துண்டு

பச்சை மிளகாய் - 3

மிளகாய் தூள் - 1 1/2 தேக்கரண்டி

கடலை மாவு - 1/2 கப்

தேங்காய் துருவல் - 1/4 கப்

கறிவேப்பிலை - ஒரு கொத்து

எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

வெங்காயத்தை தோல் உரித்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை தண்ணீரில் கழுவி பொடியாக நறுக்கிக் கொள்ளவும். இஞ்சியை தோல் சீவி சிறு சிறு துண்டாக நறுக்கிக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் இட்லி மாவுடன் கடலை மாவு, தேங்காய் துருவல், நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி மற்றும் மிளகாய் தூள், உப்பு போட்டு கலந்துக் கொள்ளவும்.

போண்டா மொறுமொறுப்பாக வருவதற்கு மாவுடன் அரிசி மாவு சேர்த்து, வடை மாவு பதத்திற்கு கெட்டியாக கலந்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கலந்து வைத்திருக்கும் மாவை கையால் சிறு சிறு உருண்டையாக போட்டு பொரிக்கவும். போண்டா பொன்னிறமாக பொரிந்ததும் எண்ணெயை வடித்து எடுத்து பரிமாறவும்.

குறிப்புகள்: