ஆனியன் பக்கோடா (1)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கடலை மாவு – 1 கப்

அரிசி மாவு – 1/2 கப்

வெங்காயம் – 2

பச்சை மிளகாய் – 4

கொத்தமல்லி, கறிவேப்பிலை (பொடிதாக நறுக்கியது) – 1/4 கப்

பெருங்காயம் – 1/2 தேக்கரண்டி

மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி

மிளகாய் தூள் – 1/2 தேக்கரண்டி

பூண்டு – 3 பல்

இஞ்சி – சிறிய துண்டு

பட்டர் – ஒரு தேக்கரண்டி

எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு

உப்பு – தேவையான அளவு

செய்முறை:

மேலே குறிப்பிட்டுள்ள தேவையானவற்றை அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

வெங்காயத்தை நீளமாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். பச்சை மிளகாய் மற்றும் இஞ்சியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பூண்டினை நசுக்கி வைக்கவும்.

ஒரு அகலமான பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

அதனுடன் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சி, கொத்தமல்லி, கறிவேப்பிலையுடன் பெருங்காயம் மற்றும் பட்டர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். (விரும்பினால் சிறிது பேக்கிங் பவுடர் சேர்த்து கொள்ளலாம்)

தேவைப்பட்டால் சிறிது அளவு தண்ணீர் தெளித்து நன்கு கலந்து வைத்துக் கொள்ளவும்.

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிசைந்து வைத்திருக்கும் மாவை சிறிது சிறிதாக கிள்ளி போடவும்.

2 நிமிடம் நன்கு பொரிய விட்டு பொன்னிறமாக ஆனதும் எண்ணெயை வடித்து எடுக்கவும்.

குறிப்புகள்: