அவல் வடை (4)
0
தேவையான பொருட்கள்:
அவல் - 1 கப்
அரிசி மாவு - 3 தேக்கரண்டி
கடலை மாவு - 2 தேக்கரண்டி
ரவை - 2 தேக்கரண்டி
பெரிய வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 4
கொத்தமல்லி இலை - சிறிதளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
இஞ்சி - சிறிதளவு
எண்ணெய் - வடை பொரிக்க தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
அவலை தண்ணீரில் 15 நிமிடம் ஊற வைத்து எடுத்துக் கொள்ளவும்
பின் அவலுடன் அரிசி மாவு, கடலை மாவு, ரவை உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
அதனுடன் வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலை, இஞ்சி சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
இதனை வடை போல் தட்டி எண்ணெயில் பொரித்து எடுத்து பரிமாறவும்.