அவல் பக்கோடா
0
தேவையான பொருட்கள்:
அவல் - 250 கிராம்
அரிசி மாவு - 100 கிராம்
கடலை மாவு - 100 கிராம்
கொண்டைக்கடலை - 100 கிராம்
வெங்காயம் - 2
மிளகாய்த்தூள் - 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து
கொத்தமல்லி - சிறிது
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
கொண்டைக் கடலையை முதல் நாளே ஊற வைத்து கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
அவலை சுத்தம் செய்து 10 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லியை நறுக்கிக் கொள்ளவும்.
அரிசி மாவு, கடலை மாவு, உப்பு, மிளகாய் பொடி, எல்லாவற்றையும், சேர்த்து கலக்கவும்.
அரைத்த கொண்டக்கடலையையும் சேர்த்து, ஊற வைத்த அவலையும் பிழிந்து சேர்க்கவும்.
நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து கெட்டியாகப் பிசையவும்.
வாணலியில் எண்ணெய் வைத்து காய்ந்ததும் மாவை கிள்ளிப் போட்டு பொரித்து எடுக்கவும்.