அரிசிமாவு பக்கோடா

off off off off off 0

தேவையான பொருட்கள்:

அரிசிமாவு - 2 கப்

பெரிய வெங்காயம் - 1

கறிவேப்பிலை - 10 இலை

பச்சைமிளகாய் - 5

எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

வெங்காயத்தை சிறியதாக அரிந்துக் கொள்ளவும். பச்சைமிளகாய் மற்றும் கறிவேப்பிலையை சிறியதாக அரிந்துக் கொள்ளவும்.

மாவுடன் வெங்காயம், பச்சைமிளகாய் மற்றும் கறிவேப்பிலையை சேர்த்து ஒரு கப் தண்ணீர் விட்டு உப்பு சேர்த்து பிசைந்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் காய்ந்தவுடன் பிசைந்த மாவை கையில் எடுத்து கிள்ளி கிள்ளி அதில் போடவும். சிவப்பு நிறமானவுடன் எடுத்து விடவும்.

குறிப்புகள்: