Oven சிக்கன் கறி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

சிக்கன் - ஒரு கிலோ

தயிர் - 4 மேசைக்கரண்டி

தனி மிளகாய்த்தூள் - 3/4 மேசைக்கரண்டி

மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி

வெங்காயம் - ஒன்று (பெரியது)

எலுமிச்சை - பாதி பழம்

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

சிக்கனை சுத்தம் செய்து, பெரிய சோயாமீற் துண்டுகள் அளவிற்கு வெட்டிக்கொள்ளவும். (எலும்புடன்).

தயிர், மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், எலுமிச்சைச் சாறு, உப்பு (தேவைக்கு ஏற்ப) போட்டு பிரட்டி 20 - 30 நிமிடங்கள் வரை ஊறவிடவும்.

வெங்காயத்தை சிறு துண்டுகளாக வெட்டி வைக்கவும்.

அவன் (tray)தட்டில் (or cake tray) அலுமினிய பேப்பர் (foiling sheet)விரித்து அதனுள் ஊறவைத்த சிக்கனை போட்டு பரவி வெங்காயத்தை மேலே தூவிவிடவும்.

அவனை 450 பாகை F ல் போட்டு சிக்கனை வைத்து விடுங்கள். அரை மணித்தியாலங்களின் பின் பார்த்தால் வெங்காயம் பொரிந்தது போல் இருக்கும். அதன்பின் மெதுவாக எல்லாவற்றையும் பிரட்டி விடுங்கள்.

மீதி அரை மணித்தியாலங்களும், இடையிடையே அவனைத் திறந்து பிரட்டி விடவும்.

மொத்தமாக ஒரு மணித்தியாலத்தில். சிக்கன் கறி தயார். பிரட்டல் கறி தேவையெனில் இன்னும் கொஞ்ச நேரம் அவனிலேயே வைத்து விடுங்கள்.

குறிப்புகள்:

குளிர்சாதனப் பெட்டியால் எடுத்த சிக்கனாயின் தானாகவே தண்ணீர் வரும். உடனேயே கடையில் வாங்கிய சிக்கனாக இருந்தால், ட்ரேயில் போடுகிற போது கால் டம்ளர் தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும். ஊற வைத்த பாத்திரத்தைக் கழுவி விட்டாலே போதும்.