KFC
தேவையான பொருட்கள்:
கோழி துண்டுகள் - ஒரு கிலோ
முட்டை - 2
பால் - 1/4 கப்
ப்ரெட் க்ரம்ப்ஸ் - ஒரு கப்
ஊறவைக்க தேவையானவை:
ஆனியன் பவுடர் - ஒரு ஸ்பூன்
சிக்கன் க்யூப் - ஒரு கட்டை
ரோஸ்மேரி - ஒரு ஸ்பூன்
ஒரிகேனோ - ஒரு ஸ்பூன்
சாதர்(மர்ஜோரம்) - ஒரு ஸ்பூன்
இஞ்சி, பூண்டு விழுது - 1.5 ஸ்பூன்
தைம் - ஒரு ஸ்பூன்
பார்ஸ்லி பொடி - 2 ஸ்பூன்
பாப்ரிகா - ஒரு ஸ்பூன்
வெள்ளை மிளகுதூள் - ஒரு ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
கோழிதுண்டுகளில் கீறல் போட்டுக் கொள்ளவும். ஊறவைக்க கொடுத்துள்ள அனைத்தையும் ஒன்றாக கலந்து ஊறவைக்கவும்.
சிக்கன் க்யூப்களை கையால் நசுக்கி பொடித்து ஊறவைக்கவும்.கோழியை ஒரு மணிநேரம் ஊறவிடவும்.
பின்பு அதனை ஒரு பெரிய பரந்த வாணலியில் பரப்பி தீயை 5 நிமிடம் குறைத்து பின் 10 நிமிடம் கூட்டி வைத்தால் சிக்கனில் தண்ணீர் விட்டிருக்கும் பாதி வெந்திருக்கும்.
அந்த தண்ணீரை வடித்து சிக்கனை தனியே சூடாற விட வேண்டும் (வடித்த தண்ணீயை சூப் செய்ய பயன்படுத்தலாம்).
பின்பு முட்டையையும், பாலையும் நன்கு நுரைக்க அடித்து அதில் ஆறிய சிக்கன் துண்டுகளை முக்கி ப்ரெட் க்ரம்ப்ஸில் இடம்விடாமல் பிரட்டி எண்ணெய் காயவைத்து பொரித்து எடுக்க வேண்டும்.
குறிப்புகள்:
பொடிவகைகளின் பேரை கேட்டால் பயமா இருக்கா? மசாலா பொடிகளின் மேல் பாருங்கள் குட்டி குட்டி பாட்டில்களில் வைத்திருப்பார்கள் அங்கு எல்லாமே இருக்கும் சுவையாக வருகிறது இதில் கிடைத்த பொடிகளை மட்டும் சேர்த்தேன். என் தோழி எல்லாம் சரியாக சேர்த்து அதை விட சுவையாக செய்திருந்தாள் இருந்தாலும் கேஃப்சி டேஸ்டில் அச்சு அசல் வராது.