ஹாட் சாக்லேட்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பால் - 3 1/2 கப்

கோகோ சாக்லேட் - 1/2 கப் (பொடியாக நறுக்கியது)

மில்க் சாக்லேட் - 1/2 கப் (பொடியாக நறுக்கியது)

சர்க்கரை - 1 tblp

வெண்ணிலா எஸ்சென்ஸ் - 1 tsp

இன்ஸ்டன்ட் காப்பி தூள் - 1 tsp

பட்டை - சிறிது

செய்முறை:

பால் சிறிது திக்காக இருப்பது அவசியம். பாலுடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

ஒரு கொதி வந்ததும் இறக்கி சாக்லேட் சேர்த்து நன்கு கிளறவும். சாக்லேட் பாலுடன் நன்கு கலந்ததும் சர்க்கரை, எஸ்சென்ஸ், காப்பி தூள் சேர்த்து நன்கு முட்டையை அடிப்பது போல் நுரை பொங்க அடித்து கலக்கவும்.

பிறகு மிதமான தீயில் சூடு செய்து உடனே பரிமாறவும். பால் கொதிவரனும்னு அவசியம் இல்லை.

பரிமாறும் முன் ஒரு துண்டு பட்டை சேர்த்து பரிமாறவும்.

குறிப்புகள்:

கோகோ சாக்லேட் இல்லை என்றால் சிறிதளவு இனிப்பு கம்மியான அல்லது காப்பி சுவையுடைய சாக்லேட் பயன் படுத்தலாம்.