ஹாட் க்ராஸ் பன்
தேவையான பொருட்கள்:
பால் - 120 மில்லி ட்ரை ஈஸ்ட் - 2 தேக்கரண்டி சர்க்கரை - 50 கிராம் உப்பு - ஒரு தேக்கரண்டி முட்டை - ஒன்று சின்னமன் பொடி - ஒரு தேக்கரண்டி வெண்ணெய் - 20 கிராம் திராட்சை - தேவைக்கு மைதா - அரை கிலோ
செய்முறை:
முதலில் தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும். பாலை மிதமாக சூடு செய்து கொள்ளவும்.
மேலே பொருட்கள் கொடுக்கப்பட்ட வரிசைப்படி
பாலில் ஒன்றன் பின் ஒன்றாக அனைத்து பொருட்களையும் போடவும். இறுதியில் மைதா மாவை போடும் போது மட்டும் முழுவதையும் போடாமல்
கொஞ்சம் கொஞ்சம் போட்டு கையில் ஒட்டாதவாறு கலவை இருக்கும் படி பிசைந்து
மீதி மாவை எடுத்து வைக்கவும்.
மாவின் பதம் சப்பாத்தி மாவை விடவும் மிக மிருதுவாக இருக்க வேண்டும்.
மாவு பாத்திரத்தை ஒரு துணியால் அல்லது பிளாஸ்டிக் கவரால் 2 மணி நேரம் மூடி வைக்கவும். மாவு இரண்டு மடங்காக அதிகரித்து இருக்கும்.
மாவை நன்கு கைகளால் அழுத்தி
காற்றை வெளியேற்றி
நீளவாக்கில் உருட்டவும்.
பின் அதை ஆறு துண்டுகளாய் வெட்டி வைக்கவும்.
வெட்டி வைத்ததை உட்புறமாக திருப்பி பிசைந்து
நைசாக
மிருதுவாக உருட்டவும். மீண்டும் அதை அரை மணி நேரம் துண்டால் மூடி வைக்கவும்.
அரை மணி நேரத்திற்கு பின்
அது இரண்டு மடங்காக அதிகரித்து இருக்கும். அதன் மீது முட்டையையோ அல்லது வெண்ணெயையோ தடவி விடவும்.
பின் உருண்டைகள் மீது கத்தியால் க்ராஸ் போல வெட்டி விடவும்.
350 டிகிரியில் முற்சூடு செய்யப்பட்ட அவனில் 30 நிமிடம்
பொன்னிறமாக மாறும் வரை வைக்கவும். பின் அவனை அணைத்து
அவன் கதவை திறந்து வைத்து 10 நிமிடம் குளிர விடவும்.
சூடான
மிருதுவான ஹோம் மேட் பன் ரெடி.