ஹலீம் (நோன்பு கஞ்சி)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

முழு கோதுமை - ஒரு கப்

மட்டன் கால் கிலோ - எலும்பில்லாதது

கடலை பருப்பு, பாசி பருப்பு, மசூர் தால் - தலா இரண்டு தேக்கரண்டி

தனியா தூள் - அரை தேக்கரண்டி

நெய் (அ) பட்டர் - ஐந்து தேக்கரண்டி

இஞ்சி பூண்டு பேஸ்ட் - ஒரு மேசைக்கரண்டி

உப்பு - தேவைக்கு

மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி

மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி

வெங்காயம் - இரண்டு (பட்டரில் வறுத்தது)

செய்முறை:

கோதுமையை இரவே ஊற வைக்கவும்.

காலையில் மூன்று பருப்புகளையும் அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

குக்கரில் ஒன்பது கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.

கொதிக்கும் போது ஊறிய கோதுமையை நல்ல வடித்து சேர்க்கவும்.

பிறகு பருப்பு வகைகள் களைந்து சேர்க்கவும்.

மட்டனை சிறிது சிறிது துண்டுகளாக அல்லது கொத்து கறி போல் கொத்தி அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட், மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு, இரண்டு தேக்கரண்டி பட்டர், தனியாத்தூள், அனைத்தையும் சேர்த்து வதக்கி கொதித்து கொண்டிருக்கும் கோதுமை பருப்பு வகைகளோடு சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.

குக்கரை மூடி போடாமலே பத்து நிமிடம் கொதிக்க விடவும்.

பிறகு மூடி போட்டு வெயிட்டை போட்டு பத்து நிமிடம் மீடியம் தீயிலும் பத்து நிமிடம் சிம்மிலும் வைத்து வேக வைத்து இறக்கவும்.

கடைசியில் மூன்று தேக்கரண்டி பட்டரில் வெங்காயத்தை நல்ல வறுத்து ஹலீமில் கலக்கவும்.

கடைசியில் கொஞ்சம் லெமென் ஜுஸ் ஊற்றினால் நல்ல டேஸ்டாக இருக்கும்.சுவையான ஹெல்தியான ஹைதராபாத் ஹலீம் ரெடி.

குறிப்புகள்:

கோதுமையை ஊற வைத்து அரைத்து திரிக்க சோம்பல்படுபவர்கள். பர்கல் (அ) ஓட்ஸில் செய்யாலாம். நோன்பு காலங்களில் தினம் தயாரிக்கும் கஞ்சி வகைகளில் இதுவும் ஒரு வகை, இது இங்குள்ள பாக்கிஸ்தானி ஹோட்டல்களில் மிகவும் பிரபலமானது இந்த ஹலீம் கஞ்சி.