ஹலீம் கஞ்சி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பாதியாக உடைத்த பச்சரிசி - அரைகப்

பாதியாக உடைத்த கோதுமை - ஒரு கப்

துவரம்பருப்பு - முக்கால் கப்

கடலைப்பருப்பு - அரைகப்

கோழி - 350 கிராம்

வெங்காயம் - 1

தக்காளி - 2

இஞ்சி பூண்டு விழுது - 3 கரண்டி

கரம் மசாலா - 2 கரண்டி

மிளகாய் தூள் - 2 கரண்டி

மஞ்சள்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன்

பச்சை மிளகாய் - 4

தேங்காய் - ஒன்று

எண்ணெய் + நெய் - 100 கிராம்

உப்பு - தேவையான அளவு

அவல் - 2 ஸ்பூன்

மல்லி, புதினா தலா - ஒரு கட்டு

எலுமிச்சைப்பழம் - ஒன்று

செய்முறை:

அரிசி, கோதுமை, பருப்பு அனைத்தையும் தண்ணீர் ஊற்றி குக்கரில் வேகவிடவும்.

வெங்காயம் தக்காளியை நீளமாக நறுக்கவும்.

தேங்காயை பால் எடுத்து வைக்கவும். கோழியை சுத்தம் செய்யவும்.

ஒரு சட்டியை அடுப்பில் வைத்து எண்ணெய் நெய் ஊற்றி வெங்காயம் தக்காளியை போட்டு வதக்கி அதில் இஞ்சி பூண்டு விழுது போட்டு வதக்கி எல்லா தூள்களையும் போட்டு வதக்கி அதில் கோழியைப்போட்டு கிளறி பாதி மல்லி, புதினாவை போட்டு உப்பு போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி நன்கு வேகவிடவும்.

கோழி வெந்தவுடன் கோழியை மட்டும் எடுத்து இதழ் இதழாக பிய்த்துக் கொள்ளவும்.

இப்பொழுது அடிப்பில் பெரிய சட்டியை வைத்து அதில் வேகவைத்த அரிசி, பருப்பு, பிய்த்த கோழி அதில் உள்ள குருமா அனைத்தையும் ஒன்றாக ஊற்றி 3 கப் தண்ணீர் ஊற்றி நன்கு மலர விடவும். முக்கால் பாகம் வெந்ததும் தேங்காய்பாலை ஊற்றி கொதிக்க விடவும்.

எலுமிச்சைப்பழத்தை பிழிந்து அதில் ஊற்றவும். கடைசியில் அவலை தூவி பத்து நிமிடம் கழித்து மேலே மல்லி புதினா தூவி சூடாக பரிமாறவும்.

குறிப்புகள்:

இது கொஞ்சம் காரமாக இருந்தால்தான் நன்றாக இருக்கும் காரம் குறைக்க நினைப்பவர்கள் குறைத்துக் கொள்ளலாம். புளி சம்பாலுடன் சாப்பிட நன்றாக இருக்கும்