ஹனி சிக்கன்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

சிக்கன் - கால் கிலோ (எலும்பில்லாதது) எள் - ஒரு தேக்கரண்டி ஊற வைக்க: தேன் - ஒரு தேக்கரண்டி லைட் சோயா சாஸ் - ஒரு மேசைக்கரண்டி மிளகு தூள் - ஒரு தேக்கரண்டி உப்பு சர்க்கரை - ஒரு சிட்டிகை எலுமிச்சை சாறு - ஒரு மேசைக்கரண்டி மேல் மாவுக்கு: மைதா மாவு - கால் கப் கார்ன் மாவு - ஒரு மேசைக்கரண்டி பேக்கிங் பவுடர் - கால் தேக்கரண்டி உப்பு சாஸ் செய்ய: தேன் - 2 மேசைக்கரண்டி மிளகு தூள் - அரை தேக்கரண்டி எலுமிச்சை சாறு - ஒரு மேசைக்கரண்டி சர்க்கரை - 2 தேக்கரண்டி உப்பு - சிட்டிகை

செய்முறை:

சிக்கனுடன் ஊற வைக்க கொடுத்தவற்றை சேர்த்து கலந்து 2 மணி நேரம் ஊற வைக்கவும்.

மேல் மாவுக்கு தேவையானவற்றை கலந்து தேவையான நீர் விட்டு பஜ்ஜி மாவு பதத்தில் கரைத்து தயாராக வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு காய விடவும்.

சிக்கன் துண்டுகளை மாவில் முக்கி எடுத்து எண்ணெயில் சிவக்க பொரித்து எடுக்கவும்.

சாஸ் செய்ய வேண்டியவற்றை கலந்து அத்துடன் சிறிது நீரும் விட்டு அடுப்பில் வைக்கவும். சாஸ் கொதித்து சற்று திக்காக துவங்கியது எடுக்கவும்.

சாஸில் சிக்கனை சேர்த்து பிரட்டி எல்லா பக்கமும் நன்றாக சாஸ் பட்டதும் எடுத்து தட்டில் வைத்து மேலே எள் தூவி பரிமாறவும். சுவையான ஹனி சிக்கன் தயார். ஃப்ரைட் ரைஸுக்கு நல்ல காம்பினேஷன்.

குறிப்புகள்: