ஸ்வீட் கார்ன் சிக்கன் சூப்
தேவையான பொருட்கள்:
கார்ன் - அரை கப்
எலும்பு நீக்கிய கோழி - 3 தேக்கரண்டி (பொடியாக நறுக்கவும்)
கார்ன் ஃப்ளார் மாவு - அரை தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு
சர்க்கரை - கால் தேக்கரண்டி
சோயா சாஸ் - அரை தேக்கரண்டி
முட்டையின் வெள்ளைக்கரு - ஒன்று
செய்முறை:
முதலில் சிக்கனில் சிறிது தண்ணீர் சேர்த்து வேக வைத்து எடுக்கவும். கார்னில் பாதியை மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்.
அதனுடன் சிக்கனும், முழு கார்னும் சேர்த்து ஒரு கப் தண்ணீர் சேர்த்து உப்பு, சர்க்கரை சேர்த்து கொதிக்க விடவும்.
கார்ன் ஃப்ளாரை ஒரு தேக்கரண்டி தண்ணீரில் கரைத்து வைக்கவும். முட்டையின் வெள்ளைக்கருவை அடித்து வைக்கவும்
சூப் கொதிக்கும்பொழுது கார்ன் ஃப்ளார் கரைசலை ஊற்ற ஊற்ற கிளறவும். சிறிது கெட்டியாகும்பொழுதே ஃபோர்க்கால் கிளற முட்டையின் வெள்ளைக்கருவையை சூப்பில் நீளமாக ஊற்றவும்.
முட்டை வெந்ததும் தீயை அணைத்து விட்டு சோயா சாஸுடன் பரிமாறவும்.
குறிப்புகள்:
சிக்கன் இல்லாவிட்டால் சிக்கன் ஸ்டாக் உபயோகிக்கலாம். குருமிளகு தூவியும் பரிமாறலாம். சோயா சாஸ் பிடிக்காதவர்களுக்கு. இதில் பொரித்த ப்ரெட் துண்டுகள் அல்லது சிறிய மொறுமொறு கார்லிக் ப்ரெட் இட்டு பரிமாறலாம்.