ஸ்ப்ரிங் ரோல்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மைதா - 2 கப் + அரை கப் கார்ன் ப்ளார் - அரை கப் பச்சைபயறு - அரை கப் கோஸ் - 100 கிராம் கேரட் - ஒன்று பீன்ஸ் - 6 குடை மிளகாய் - ஒன்று ஸ்பிரிங் ஆனியன் - 4 பீஸ் செலரி - சிறிதளவு அஜினமோட்டோ - அரை தேக்கரண்டி சோயா சாஸ் - ஒரு மேசைக்கரண்டி க்ரீன் சில்லி சாஸ் - 2 மேசைக்கரண்டி மிளகுத் தூள் - அரை தேக்கரண்டி பிரட் க்ரம்ஸ் - அரை கப் உப்பு - சுவைக்கு எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு

செய்முறை:

காய்கறிகள் எல்லாவற்றையும் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். முதல் நாளே பச்சை பயிறை நன்கு ஊற வைத்து முளைக்கட்டி வைத்துக் கொள்ளவும்.

ஒரு அகலமான பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கேரட்

பீன்ஸ்

கோஸ் ஆகியவற்றை போட்டு வதக்கவும். காய்கள் எண்ணெயில் மட்டுமே வதங்க வேண்டும். காய்கறியில் உள்ள நீர் முழுவதையும் வற்ற வைக்கவும். காய்கள் அரை வேக்காடாக வெந்திருந்தால் போதும்.

அதன் பின்னர் சாஸ் வகைகள்

அஜினமோட்டோ

உப்பு சேர்க்கவும். அதனுடன் பொடியாக நறுக்கின குடை மிளகாய்

ஸ்ப்ரிங் ஆனியன்

செலரி

முளைக்கட்டிய பயிறு மற்றும் மிளகு தூள் சேர்த்து கிளறி விட்டு இறக்கவும்.

மைதா மாவுடன் கார்ன் மாவு

உப்பு சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும்.

ஒரு தட்டில் நீரில் நனைத்த துணியை விரித்து வைக்கவும். தோசைக்கல்லை அடுப்பில் வைத்து கரைத்து வைத்திருக்கும் மாவில் மெல்லிய தோசை வார்க்கவும்.

தோசை சற்று கூட முறுகாமல் லேசாக வெந்ததும் திருப்பிப்போடாமல் ஈரத்துணியின் மீது போட வேண்டும். அப்படிப் போடும் போது வெந்த பகுதி கீழேயும் வேகாத பகுதி மேலேயும் இருக்குமாறு போடவும். தோசை

சுருங்கிப் போகாமல் விரித்தாற்போல போடவும். இந்த தோசை மீது காய்கலவையை போதுமான அளவு வைத்து பக்கவாட்டு பகுதி இரண்டையும் மடக்கவும்.

பிறகு தோசையின் ஆரம்பத்தில் இருந்து பாய் போல் ரோல் செய்யவும். ரோல் செய்யும் போது உள்ளே வைத்திருக்கும் காய் பிரியாத அளவுக்கு செய்ய வேண்டும். தோசையின் சூட்டிலேயே நன்கு ஒட்டிக் கொள்ளும். இவ்வாறு எல்லாத் தோசைகளையும் ரோல் செய்துக் கொள்ளவும்.

மைதாவை ஒரு தட்டில் அல்லது கிண்ணத்தில் தோசை மாவு பதத்தில் கரைத்து ரோல்களை அதில் நனைத்து எடுக்கவும்.

அதன் பின்னர் பிரட் க்ரம்ஸில் பிரட்டி எடுக்கவும்.

ரோல்கள் எல்லாவற்றையும் டப்பாவில் வரிசையாக அடுக்கி வைக்கவும்.

இந்த ரோல்களை ப்ரீஸரில் வைத்துக் கொள்ளவும். ஒரு வாரம் ஆனாலும் கெடாமல் நன்றாக இருக்கும்.

தேவைப்படும் போது ரோல்களை ப்ரிட்ஜில் இருந்து எடுத்து ரூம் டெம்ப்ரேச்சருக்கு வந்ததும்

எண்ணெயில் மொறுமொறுப்பாக பொரித்து எடுக்கவும். பொரிக்கும் போது சிறுதீயில் வேகச் செய்தால் தான் மொறுமொறுப்பாக இருக்கும். சாஸுடன் சாப்பிட்டால் சுவையாக இருக்கும். அசத்தலான அசல் சைனீஸ் ரோல் இது. அறுசுவை கூட்டாஞ்சோறு பகுதியில் குறிப்புகள் கொடுத்துவரும் திருமதி. ஸாதிகா அவர்கள் அறுசுவை நேயர்களுக்காக செய்து காட்டியுள்ள ஸ்ப்ரிங் ரோல் இது. நீங்களும் இதனை செய்து பார்த்து தங்கள் கருத்தினை பகிர்ந்துக் கொள்ளுங்கள்.

குறிப்புகள்: