ஸ்பைசி மஃபின்ஸ்
தேவையான பொருட்கள்:
மைதா-ஒன்றரை கோப்பை
கார்ன் மீல்-அரைக்கோப்பை
முட்டை-இரண்டு
பேக்கிங் பவுடர்-ஒரு மேசைக்கரண்டி
உப்புத்தூள்-அரைத்தேக்கரண்டி
மோர்-ஒரு கோப்பை
சர்க்கரை-இரண்டு மேசைக்கரண்டி
சில்லி பவுடர்-அரைத்தேக்கரண்டி
ஜிஞ்சர்பவுடர்-கால் தேக்கரண்டி
ஜலபீனோ பெப்பர்-ஒன்று
துறுவிய சேடார் சீஸ்-அரைக்கோப்பை
ஆலீவ் ஆயில்- கால்க்கோப்பை
செய்முறை:
ஒரு கோப்பையில் முட்டைய்யை உடைத்து ஊற்றி அதனுடன் மோர், மற்றும் எண்ணெய்யை ஊற்றி நன்கு கலக்கவும்.
பின்பு அதனுடன் கார்ன் மீல் மற்றும் பொடியாக நறுக்கிய ஜாலபீனோ பெப்பரையும் போட்டு நன்கு கலக்கி பத்து நிமிடத்திற்க்கு ஊற வைக்கவும்.
பிறகு மற்றொரு கோப்பையில் மைதாவுடன் பேக்கிங் பவுடர் உப்பு சர்க்கரை சில்லிபவுடர் மற்றும் சீஸ் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலக்கி முட்டைக் கரைசலில் சேர்த்து இலேசாக கலக்கவும்.
பிறகு இந்த கலவைய்யை எண்ணெய் தடவிய பன்னிரென்டு குழிகலுள்ள மஃபின் டின்னில் சரிசமமாக ஊற்றவும்.
தயாரித்த மஃபின் டின்னை 375 டிகிரி Fல் சூடாக்கிய அவெனில் வைத்து இருபது நிமிடங்களுக்கு வேகவைக்கவும்.
நன்கு வெந்ததை உறுதி செய்துக் கொண்டு வெளியில் எடுத்து பத்து நிமிடத்தற்க்கு ஆறவைத்த பின்பு டின்னிலிருந்து எடுத்து பரிமாறவும்.