ஸ்பைசி கார்ன் (1)
தேவையான பொருட்கள்:
மக்காச்சோளம்- நான்கு
உப்புசேர்த்த வெண்ணெய்-ஒரு மேசைக்கரண்டி
எண்ணெய்-ஒரு மேசைக்கரண்டி
மிளகுத்தூள்- அரைதேக்கரண்டி
சீரகத்தூள்-அரைதேக்கரண்டி
சில்லி பவுடர்-கால்தேக்கரண்டி
ஜாலபீனோ மிளகாய்-ஒன்று
உப்புத்தூள்-இரண்டு தேக்கரண்டி
எலுமிச்சை சாறு-ஒரு தேக்கரண்டி
செய்முறை:
மக்காச்சோளத்தை உரித்து சுத்தப்படுத்தவும்.
ஒரு பெரிய பாத்திரத்தில் சோளம் மூழுகும் அளவிற்க்கு தண்ணீரை ஊற்றி உப்பைச் சேர்த்து கொதிக்கவிடவும்.
அதில் சோளத்தை சேர்த்து மூடிப் போட்டு வேகவிடவும்.
பிறகு ஜாலபீனோ பெப்பரை இரண்டாக நறுக்கி அதனுள்ளிருக்கும் விதைகளை அகற்றி விட்டு சதையை மட்டும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
பிறகு ஒரு சிறிய சாஸ்பேனில் எண்ணெயையும், வெண்ணெயையும் போட்டு வெண்ணெய் உருகியதும் மிளகாய், மற்றுமுள்ள எல்லாப் பொடிகளையும் போட்டு கலக்கி விட்டு இறக்கி விடவும்.
பிறகு சோளம் நன்கு வெந்தவுடன் அரித்தெடுத்து ஒரு தட்டில் வைக்கவும்.
பிறகு ஒரு சிறிய பிரஷ்ஷின் உதவியால் வெண்ணெய் சாஸை தொட்டு சோளத்தின் மீது எல்லாபக்கத்திலும் படும்படியாக பூசிவிட்டு, அதன் மீது எலுமிச்சைசாற்றை தெளித்து சூடாக பரிமாறவும்.