ஸ்பெஷல் கொத்துகறி குருமா
0
தேவையான பொருட்கள்:
கொத்துகறி - அரைகிலோ
தக்காளி - ஒன்று
வினிகர் - இரண்டுகரண்டி
சப்ஜாஇலை - ஒரு கைப்பிடி
எண்ணெய் - நான்கு கரண்டி
உப்பு - தேவையான அளவு
அரைக்கவும்:
பூண்டு - பத்து பல்
மிளகு - 15
காய்ந்த மிளகாய் - 6
செய்முறை:
கறியை வினிகர் ஊற்றி நன்றாக வேக விடவும்.
ஒரு நாண்ஸ்டிக் சட்டியில் எண்ணெய் விட்டு அரைத்த விழுதை போட்டு வதக்கவும்.
பின் அதில் தக்காளியை போட்டு வேகவைத்த கறியை போட்டு கிளறவும். அது நன்றாக எண்ணெய் விட்டதும் சப்ஜா இலையை தூவி சிம்மில் வைத்து இரண்டு நிமிடம் கழித்து இறக்கவும்
குறிப்புகள்:
இது சாதம் சப்பாத்தியுடன் சாப்பிட நன்றாக இருக்கும்.