ஸ்பகடி கறி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

அரைத்த இறைச்சி - 500 கிராம் ஸ்பகடி - 500 கிராம் போலோக்னீஸ் - 250 கிராம் வெங்காயம் - ஒன்று பச்சைமிளகாய் - 2 கடுகு - 1/4 தேக்கரண்டி பெருஞ்சீரகம் - 1/2தேக்கரண்டி மிளகாய்த்தூள் - 2 தேக்கரண்டி எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி உப்பு - தேவையான அளவு

செய்முறை:

வெங்காயம் மற்றும் மிளகாயை சிறுத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். மற்ற தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீரை ஊற்றி கொதிக்க வைக்கவும். தண்ணீர் கொதித்ததும் அதில் ஸ்பகடியை போட்டு உப்பு சேர்த்து 10 நிமிடம் வேக விடவும்.

ஸ்பகடி வெந்ததும் எடுத்து தண்ணீரை வடித்து விட்டு குளிர்ந்த தண்ணீரை தெளித்து கிளறி விடவும். இதுப் போல் செய்வதால் ஸ்பகடி ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் இருக்கும்.

ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளித்து நறுக்கின வெங்காயத்தை போட்டு வதக்கவும். பின்னர் பெருஞ்சீரகத்தை சேர்த்து வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

அதன் பிறகு இறைச்சி மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.

இறைச்சியை சேர்த்த பின்னர் நறுக்கின மிளகாய்

மிளகாய் தூள் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து இறைச்சியை வேக விடவும்.

இறைச்சி நன்கு வெந்ததும் போலோக்னீஸ் சேர்த்து எல்லாம் ஒன்றாக சேரும்படி கிளறி விடவும்.

கறி தண்ணீர் இல்லாமல் சுண்டியதும் இறக்கி வைத்து விடவும்.

இப்போது ஸ்பகடியுடன் கறியினை சேர்த்துப் பரிமாறவும். போலோக்னீஸ் இல்லாவிட்டால் தக்காளி சாஸ் சேர்த்தும் செய்யலாம்.

அறுசுவை நேயர்களுக்காக இந்த சுவையான ஸ்பகடி கறியை செய்து காட்டியவர் திருமதி. வத்சலா நற்குணம் அவர்கள். இலங்கை சமையல் செய்முறைகள் பலவற்றை நேயர்களுக்கு தொடர்ந்து வழங்கி வருகின்றார். இதனை செய்து பார்த்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

குறிப்புகள்: