ஸ்ட்ராபெர்ரி ஜாம்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

சீனி - 2 கப் லெமன் - 2 ஸ்ட்ராபெர்ரி - அரை கிலோ

செய்முறை:

தேவையானவற்றைத் தயாராக எடுத்து வைக்கவும். சமைக்க ஆரம்பிப்பதற்கு ஒரு மணி நேரம் முன்பாக

குளிர் சாதனப் பெட்டியில் வெறும் தட்டு ஒன்றைக் குளிர வைக்கவும். இறுதியில் ஜாம் பதம் கண்டுபிடிக்க இது தேவைப்படும்.

ஸ்ட்ராபெர்ரியின் காம்புப் பகுதியை நீக்கி

சிறிது குடைந்து விட்டு மீதியைப் பாதியாக நறுக்கி வைக்கவும். பெரிய பழங்களை நான்காக நறுக்கிக் கொள்ளவும்.

ஒரு பாதி லெமனின் மேற்தோலை மட்டும் சுரண்டித் தனியே எடுத்து வைக்கவும். மீதியைச் சாறு பிழிந்து எடுக்கவும்.

பாத்திரத்தில் லெமன் சாறு

லெமன் செஸ்ட் மற்றும் சீனியைக் கலந்து

மெல்லிய தீயில் வைத்து சீனி கரையும் வரை (அண்ணளவாக 15 நிமிடங்கள்) கிளறவும்.

இவற்றோடு ஸ்ட்ராபெர்ரி துண்டுகளைச் சேர்த்து வேகவிடவும்.

இடையிடையே கிளறிவிடவும். தேவையானால் பெரியதாக உள்ள துண்டுகளைக் கரண்டியால் சிறிது மசித்துவிட்டுக் கொள்ளலாம்.

ஸ்ட்ராபெர்ரி சேர்த்த 20 நிமிடங்களில் ஜாம் தயாராகி இருக்கும்.

குளிரூட்டியில் வைத்த தட்டில் சிறிது ஜாம் விட்டால்

ஜெல் மாதிரி ஒட்டிக் கொள்ள வேண்டும். அது தான் சரியான பதம்.

ஜெல் போன்ற பதத்திற்கு வந்தவுடன் இறக்கி

சூடாக இருக்கும்போதே சாடியில் விட்டு இறுக்கமாக மூடி வைக்கவும். அருமையான ஸ்ட்ராபெர்ரி மணத்துடன்

இனிமையான ஸ்ட்ராபெர்ரி ஜாம் தயார்.

குறிப்புகள்: