ஸ்ட்ராபெர்ரி க்ரானிட்டா

off off off off off 0

தேவையான பொருட்கள்:

ஸ்ட்ராபெர்ரி - 15 - 20 சர்க்கரை - அரை கப் எலுமிச்சை - ஒன்று புதினா இலை - 5

செய்முறை:

ஸ்ட்ராபெர்ரியை கழுவி துடைத்து இலைகளை நீக்கி நறுக்கி வைக்கவும்.

சர்க்கரை சேர்த்து கிளறி மூடி வைக்கவும்.

ஒரு மணி நேரத்திற்கு பிறகு இப்படி இருக்கும். தண்ணீரை தனியே வடிகட்டி ஸ்ட்ராபெர்ரி துண்டுகளை மட்டும் சேர்த்து எலுமிச்சை சாறு மற்றும் புதினா இலை சேர்த்து அரைக்கவும்.

வடிக்கட்டி ஏற்கனவே தனியே எடுத்து வைத்துள்ள நீர் எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து கிளிங் வ்ராப் போட்டு மூடி பிரீசரில் வைக்கவும்.

முக்கால் மணி நேரம் கழித்து வெளியில் எடுத்து ஒரு முள் கரண்டியால் கீறி விடவும். திரும்பவும் பிரீசரில் வைக்கவும். இதே போல் இரண்டு முறை செய்யவும். மூன்றாவது முறை இரவு முழுக்க வைத்திருக்கவும்.

பரிமாறும் ஒரு மணி நேரத்திருக்கு முன்பு அதே போல் எடுத்து கிளறி பிரீசரில் அல்லாமல் குளிர்சாதன பெட்டியில் வைத்து எடுத்து பரிமாறவும். அப்படியே க்ரிஸ்டல் போல் இருக்கும். புதினா எலுமிச்சை சாறு சேர்த்திருப்பதால் ரிஃப்ரெஷிங்கா இருக்கும்.

குறிப்புகள்: