ஸ்டப்ட் கேபேஜ் ரோல்ஸ்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கேபேஜ் - 1

சாதம் - 2 கப்

பூண்டு - 1

தக்காளி சாஸ் - 5 தேக்கரண்டி

உப்பு - தேவைகேற்ப

மிளகு தூள் - 1 தேக்கரண்டி

சீஸ் - 2 தேக்கரண்டி துருவியது

தக்காளி சாஸுக்கு:

எண்ணெய் - 1 தேக்கரண்டி

பூண்டு - 1 பல் வெட்டியது

டொமெட்டோ - 3

வெங்காயம் - 1 வெட்டியது

லெமன் ஜூஸ் - 1 தேக்கரண்டி

செய்முறை:

தக்காளி சாஸ் செய்முறை:

கடாயில் எண்ணெய் விட்டு பூண்டு, வெங்காயம், வெட்டிய தக்காளி போட்டு

பதினைந்து நிமிடம் நன்றாக மூடி போட்டு வதக்கவும். இப்போது தக்காளி சாஸ் ரெடி

கேபேஜ் ரோல் செய்முறை:

வெங்கயாத்தை வெட்டி கொள்ளவும். பூண்டை சின்னதாக வெட்டவும்.

கேபேஜின் 10 நல்ல பெரிய இலைகளை எடுத்து நன்றாக தண்ணீரில் அலசி எடுக்கவும்.

ஒரு பாத்திரத்தில் தண்ணீரை விட்டு நல்ல கொதிக்கவிடவும். கொதிக்கும் போது இந்த இலைகளை ஐந்து நிமிடம் போட்டு எடுக்கவும். நல்ல தண்ணீரை வடிய விட்டு எடுக்கவும்.

கடாயில் எண்ணெய் விட்டு பூண்டு, வெங்காயம் போட்டு நன்றாக வதக்கவும்.

நிறைய நேரம் வதக்க வேண்டாம். அதில் வெந்த சாதத்தையும் உப்பு, மிளகு தூள், தக்காளி சாஸையும் போட்டு நன்றாக கலந்து பத்து நிமிடம் வைக்கவும்.

கேபேஜ் இலையின் நடுவில் இந்த அரிசி கலவை 2 தேக்கரண்டி போட்டு இலையின் ஒரங்களில்

இருந்து பாய் போல் சுருட்டி வைக்கவும்.

பானில் முதலில் கொஞ்சம் எண்னெய் விட்டு லேயர் முறையில் முதலில் தக்காளி சாஸ் ஊற்றவும். அதன் மேல் கேபேஜ் ரோலை அடுக்கி வைக்கவும்.

திரும்ப அதன் மேல் மீதமிருக்கும் தக்காளி சாஸை ஊற்றி மூடி போட்டு ஒவனில் 350 டிகிரி 30 நிமிடம் வைக்கவும்.

வெளியே எடுத்து அதன்மீது துருவிய சீஸ் பார்ஸ்லி இலை போடவும்.

இந்த கேபேஜ் ரோல் டொமேட்டோ சாஸுடன் சாப்பிட நன்றாக இருக்கும்.

குறிப்புகள்:

இது போலிஷ், ரஷ்யா, ஹங்கேரி போன்ற நாட்டில் செய்வார்கள். இதே மாதிரி க்ரேப் இலையிலும் செய்வார்கள்.

ஒவன் இல்லாதவர்கள். இட்லி பான் அல்லது ஸ்டீம்மரில் இதே போல் முப்பது நிமிடம் வைத்து எடுக்கவும்.