ஸ்டஃப்ட் குடமிளகாய்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பச்சை குடமிளகாய் - ½ கிலோ

கொத்திய இறைச்சி – 300 கிராம்

துருவிய சீஸ் - 1 கப்

பொடிதாக நறுக்கிய மல்லி இலை – ½ கப்

இஞ்சிப்பூண்டு விழுது – 1 தேக்கரண்டி

பொடித்த மிளகு – 1 மேசைக்கரண்டி

மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி

பொடிதாக வெட்டிய வெங்காயம் – 1 கப்

பச்சை மிளகாய் – 3 பொடிதாக வெட்டிக்கவும்

உருளைக்கிழங்கு – 2 வேகவைத்து உதிர்துக்கொள்ளவும்

உப்பு - சுவைக்கேற்ப

ஆலிவ் ஆயில் அல்லது மார்ஜரின் – தேவையான அளவு

செய்முறை:

ஆலிவ் ஆயில், சீஸ், குடமிளகாய் இவற்றைத்தவிர மற்ற அனைத்தையும் ஒன்றாக கலந்துக்கவும். குடமிளகாயை பாதியாக வெட்டி உள்ளே உள்ள விதைகளை எடுத்து விடவும். அதில், 1 மேசைக்கரண்டி துருவிய சீஸை போட்டு அதன் மேல் இறைச்சி கலவையை நன்றாக அழுத்தி வைக்கவும். மீண்டும் அதன் மீது துருவிய சீஸை போடவும். பிறகு ஆலிவ் ஆயில் அல்லது மார்ஜரினை மேலே ஊற்றவும். இதை 180 டிகிரி செல்ஸியஸில் 10 அல்லது 15 நிமிடங்கள் வைக்கவும். சுவையான ஸ்டஃப்ட் குடமிளகாய் தயார்.

குறிப்புகள்: