ஸ்டஃப்டு ரெட் பெப்பர்
தேவையான பொருட்கள்:
சிவப்பு நிற குடைமிளகாய் - நான்கு
லாங் கிரைன் ரைஸ் - ஒரு கோப்பை
கேரட் - ஒரு கோப்பை
மஷ்ரூம் - ஒரு கோப்பை
பச்சைநிற குடைமிளகாய் - அரைக்கோப்பை
நறுக்கிய வெங்காயம் - ஒரு கோப்பை
நறுக்கிய பார்ஸ்லி - இரண்டு மேசைக்கரண்டி
நறுக்கிய பேஸில் - இரண்டு மேசைக்கரண்டி
முட்டை - ஒன்று
மிளகுத்தூள் - ஒரு தேக்கரண்டி
வெஜிடபிள் ஸ்டாக் - இரண்டு கோப்பை
துருவிய மொஸரல்லா சீஸ் - அரைக்கோப்பை
செய்முறை:
அரிசியை நன்கு கழுவி கொதிக்கும் வெஜிடபிள் ஸ்டாக்கிப் போட்டு வேகவைத்துக் கொள்ளவும்.
ஒரு சட்டியில் வெண்ணெய்யை போட்டு உறுக்கி வெங்காயத்தையும், மஷ்ரூமையும் போட்டு வதக்கவும்.
பின்பு கேரட்டையும், குடமிளகாயாயும் போட்டு வதக்கி வேகவிடவும்.
காய்கள் நன்கு வெந்தவுடன் வேகவைத்த சோற்றுடன், பார்ஸ்லி, பேஸில்,உப்பு மிளகைப்போட்டு முட்டைய்யை அடித்து கலவையில் ஊற்றி கலக்கி வைக்கவ்ம்.
பிறகு குடமுளகாய்யை குறுக்காக இரண்டாக வெட்டி அதில் தயாரித்த கலவைய்யை நிறப்பவும். இதைப்போலவே எட்டுப் பகுதியிலும் நிரப்பவும்.
பிறகு அதன் மீது துறுவிய சீஸை தூவி 400டிகிரி Fல் சூடாக்கிய அவெனில் வைத்து சீஸ் உறுகும் வரை வைத்திருந்து வெளியில் எடுத்து சூடாக பரிமாறவும்.