ஷ்ரெட்டட் சில்லி சிக்கன்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

சிக்கன் ப்ரெஸ்ட் - அரை - முக்கால் கிலோ

எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்

சில்லி பவுடர் - 1 டீஸ்பூன்

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்

பூண்டு - 1 டேபிள்ஸ்பூன் (பொடியாக கட் பண்ணியது)

குடை மிளகாய் - 1

பச்சை மிளகாய் - 2(விருப்பப்பட்டால்)

ஸ்பிரிங் ஆனியன் - அரை கப்

சோயா சாஸ் - 1 டேபிள்ஸ்பூன்

வினிகர் - 1 டேபிள்ஸ்பூன்

கார்ன் ஃப்ளார் - 1 டேபிள்ஸ்பூன்

உப்பு - தேவைக்கு

செய்முறை:

சிக்கனை சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக கட் செய்து இஞ்சி பூண்டு பேஸ்ட், சில்லி பவுடர், வினிகர், சோயா சாஸ், உப்பு சேர்த்து மிக்ஸ் செய்து 3 மணி நேரம் ஊறவைக்கவும்.

குடை மிளகாய், ஸ்பிரிங் ஆனியன், பூண்டு கட் பண்ணி வைக்கவும்.

சிக்கனை ஆவியில் வைத்து வேக வைக்கவும். குக்கரில் ஒரு பாத்திரத்தில் வைத்து 2 விசில் வைக்கவும்.

ஆறியவுடன் உதிர்த்துக்கொள்ளவும்.

நாண்ஸ்டிக் கடாயில் எண்ணெய் விட்டு, பொடியாக நறுக்கிய பூண்டை போட்டு வதக்கவும். பச்சை மிளகாய், குடை மிளகாய், ஸ்பிரிங் ஆனியன் சேர்த்து வதக்கவும். பிறகு உதிர்த்த சிக்கனை சேர்க்கவும். கார்ன் ஃப்ளார் மாவை தூவி வதக்கவும்.

இப்பொழுது சுவையான ஷ்ரெட்டட் சில்லி சிக்கன் ரெடி.

குறிப்புகள்:

இதனை ஃப்ரைட் ரைஸ், நூடுல்ஸ் உடன் பரிமாறலாம்.