ஷோலா ராஜ்மா மசாலா
தேவையான பொருட்கள்:
ஷோலா சன்னா- கால் கப்
ராஜ்மா - கால் கப்
இஞ்சி பூண்டு விழுது- 3 ஸ்பூன்
வர மிளகாய்-2
வெங்காயம்-2
தக்காளி-2
தனியா தூள்- 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் -கால்ஸ்பூன்
மிளகாய் தூள்- 1/2 ஸ்பூன்
கரம் மசாலா- 1/2 ஸ்பூன்
சன்னா மசாலா- 1 ஸ்பூன்
ஓமம்- கால்ஸ்பூன்
சீரகம்-கால்ஸ்பூன்
காய்ந்த மாதுளைவிதை (anarthana)- கால் ஸ்பூன்
கொத்தமல்லி- சிறிதளவு
செய்முறை:
ஷோலா சன்னாவையும், ராஜ்மாவையும் 8 மணி நேரம் ஊற விடவும். பின் குக்கரில் வேக வைக்கவும்.
தூள் வகைகளை நீரில் கலந்து விழுது போல் செய்து கொள்ளவும்
தக்காளியையும் வெங்காயத்தையும் நன்கு பொடியாய் நறுக்கவும் (பாதியாய் அரைத்தது போல்)
ஓமம்,அனர்தனா, சீரகம் மூன்றையும் எண்ணெய் இல்லாமல் வெறும் வாணலியில் வறுத்து மிக்ஸியில் பொடித்துக்கொள்ளவும்
வாணலியில் எண்ணெய்விட்டு வரமிளகாய் சேர்க்கவும்
பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும்
பின்னர் வெங்காயம்,தக்காளி சேர்த்து கிளறவும்
அதில் மசாலா விழுது மற்றும் உப்பு சேர்த்து எண்ணெய் பிரிய வதக்கவும்
பின் சன்னா வகைகளை வேக வைத்த நீருடன் சேர்த்து கொதிக்க விடவும்
பின் அரைத்த பொடி சேர்த்து 5 நிமிடம் கொதிக்க வைத்து கொத்தமல்லி தூவி இறக்கவும்
குறிப்புகள்:
விருப்பத்திற்கு ஏற்ப நீர்த்தும் அல்லது கெட்டியாகவும் செய்யலாம். பட்டூரா சப்பாத்திக்கு அருமையாக இருக்கும்