ஷவர்மா (அரேபியன் சான்ட்விச்)
தேவையான பொருட்கள்:
குபூஸ் - நான்கு
சிக்கன் ஊறவைக்க:
போன்லெஸ் சிக்கன் - கால் கிலோ
தயிர் - ஐம்பது மில்லி
ஏலக்காய் தூள் - கால் தேக்கரண்டி
ஆலிவ் ஆயில் - ஒரு மேசைக்கரண்டி
உப்பு - தேவைக்கு
மிளகு தூள் - அரை தேக்கரண்டி
ஷவர்மா சாஸ்:
வெள்ளை எள் - ஐம்பது கிராம்
தயிர் - ஐம்பது மில்லி
பூண்டு - அரை தேக்கரண்டி (அரைத்தது)
எலுமிச்சை - இரண்டு
ஆலிவ் ஆயில் - மூன்று தேக்கரண்டி
பார்ஸ்லி இலைகள் - நான்கு தேக்கரண்டி (பொடியாக அரிந்தது)
உப்பு - அரை தேக்கரண்டி
வெள்ளை மிளகு தூள் - அரை தேக்கரண்டி
பொடேட்டோ பிங்கர்ஸ் - ஒரு பதினாறு ஸ்ட்ரிப்ஸ்
வெள்ளரி - நீளமாக அரிந்து உப்பில் ஊற வைத்தது
செய்முறை:
முதலில் குபூஸ் செய்து கொள்ளுங்கள் (அ) ரெடி மேடாக வாங்கி கொள்ளவும்.
ஷவர்மா சாஸ் - பூண்டுடன் எள், தயிர் சேர்த்து அரைத்து அத்துடன் உப்பு, வெள்ளை மிளகு தூள், பார்ஸ்லி இலைகள், எலுமிச்சைச்சாறு, ஆலிவ் ஆயில் சேர்த்து கலக்கி ஃப்ரிட்ஜில் வைத்து கொள்ள வேண்டும்.
சிக்கனை கழுவி தண்ணீரை வடித்து, தயிரில் மிளகு தூள், உப்பு தூள், ஆலிவ் ஆயில், ஏலக்காய் தூள் சேர்த்து சிக்கனை போட்டு விரவி ஃப்ரிட்ஜில் மூன்று மணி நேரம் நல்ல ஊறவைக்க வேண்டும்.
பிறகு இதை க்ரில் செய்து கொள்ளலாம். க்ரில் இல்லாதவர்கள் தவாவில் போட்டு நல்ல வறுத்து கொள்ளுங்கள்.
பொடேட்டோ (பிரென்ச் பிரைஸ்)பொரித்து வைத்து கொள்ளவேண்டியது.
குபூஸை நடுவில் இரண்டாக பிரிக்கவும். அதில் ஷவர்மா சாஸ்
தடவி வெந்த வறுத்த சிக்கன். குகும்பரை (வெள்ளரிக்காயை) மாவடு உப்பு போட்டு ஊறவைப்பது போல் எடுத்து கொள்ள வேண்டும், பொடேட்டோ எல்லாவற்றையும் அதன் நடுவில் வைத்து குபூஸை ரோல் செய்து சாப்பிடவேண்டியது.
குபூஸ் செய்முறையை www.arusuvai.com/tamil/node/6215 கிளிக் செய்து பார்த்து கொள்ளவும்.
குறிப்புகள்:
துபாய், சவுதி போன்ற இடங்களில். அதிகமாக காணப்படுவது இந்த ஷவர்மா கடைதான். ஒன்று வாங்கி சாப்பிட்டு ஒரு ஜூஸை குடித்தால் போதும் வயிறு திம். இதோ இது எனக்கு தெரிந்த ஷவர்மா டிரை பண்ணி பாருங்கள்
கடையில் சிக்கன் (அ) மட்டனை ஒரு பெரிய குச்சியில் வைத்து நெருப்பில் வேகவிட்டு அதை கொஞ்சம் கொஞ்சமா கட் பண்ணி அந்த நெருப்பு தனலில் வறுத்து எடுத்து வைப்பார்கள். நம்மால் அந்த அளவுக்கு செய்ய முடியாது.