வெள்ளை அப்பம்
தேவையான பொருட்கள்:
பசுமதி அரிசி - 1 1/2 கப்
பேக்கிங் பவுடர் - 1/4 தேக்கரண்டி
ஈஸ்ட் - 1/2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
இளம்சூடான நீர் - 1/4 கப்
தேங்காய்ப்பால் - 1/2 கப்
பிரவுண்சீனி - 4 மேசைக்கரண்டி
செய்முறை:
பசுமதி அரிசியை 3அல்லது4 மணித்தியாலங்களுக்கு ஊறவிட்டு தோசைக்கு அரைப்பதுபோல் விழுதாக அரைக்கவும்.
இளம்சூடான நீரில் 1 மேசைக்கரண்டி பிரவுண் சீனியைக் கரைத்து அதனுள் ஈஸ்ட்டை போட்டு 10 நிமிடங்களுக்கு வைக்கவும்.
பின்னர் அரைத்த மாவினுள் பேக்கிங் பவுடர், ஈஸ்ட் கரைசல், உப்பு, 1மேசைக்கரண்டி சீனி என்பவற்றை சேர்த்து குழைத்து (தோசைமா பதத்தில்) 3அல்லது4 மணித்தியாலங்களுக்கு புளிக்க விடவும்.
தேங்காய்ப்பாலினுள் மீதமுள்ள சீனியை போட்டு கரைத்து வைக்கவும்.
பின்னர் அப்பச்சட்டியை சூடாக்கி அதில் 1 அல்லது 1 1/2 கரண்டி மாவை ஊற்றி சட்டியை சுழற்றி விட்டு மூடி அரை நிமிடம் வேக விட்டு பின்னர் மூடியைத்திறந்து 2 அல்லது 3 மேசைக்கரண்டி தேங்காய்ப்பாலை அப்பத்தின் நடுவில் பரவலாக ஊற்றி திரும்பவும் மூடி 2அல்லது3 நிமிடங்கள் வேக விட்டு எடுக்கவும்.
சுவையான வெள்ளை அப்பம் தயார். இதனை சூடாக பரிமாறவும். இதற்கு பக்க உணவுகள் தேவையில்லை. அப்படியே சாப்பிடலாம்.
குறிப்புகள்:
இனிப்புச் சுவை விரும்பாதவர்கள் இதனை தேங்காய்ப்பால் விடாமல் செய்து சம்பல்/குழம்புடன் சாப்பிடலாம். இலங்கையில் சிங்கள மக்கள் இவ்வாறு பால் விடாது அப்பம் செய்து வெங்காயம், செத்தல் மிளகாய் கொண்டு செய்யப்படும் கட்டை சம்பல் எனும் ஒரு வகையான சம்பலுடன் உண்பார்கள். மிகவும் சுவையாக இருக்கும். இந்த அப்பமும் சம்பலும் அங்கு மிகவும் பிரபலம்.
<img src="files/pictures/vellai_appam.jpg" alt="vellai appam" />