வெட்டுப் பலகாரம்
தேவையான பொருட்கள்:
பச்சைப் பயறு - அரை கிலோ பச்சரிசி - கால் கிலோ சீனி - அரை கிலோ தேங்காய்த் துருவல் - ஒரு கப் ஏலக்காய்ப் பொடி - ஒரு தேக்கரண்டி உப்பு - ஒரு சிட்டிகை மேல் மாவுக்கு: அரிசி மாவு - ஒரு கைப்பிடி அளவு மைதா மாவு - ஒரு கப் (அ) ஒன்றேகால் கப் சீனி - ஒரு தேக்கரண்டி உப்பு - கால் தேக்கரண்டி மஞ்சள் ஃபுட் கலர் - கால் தேக்கரண்டி எண்ணெய் - பொரிக்க
செய்முறை:
பயறை சுத்தம் செய்து பொன்னிறமாக வறுத்து ஆறவிட்டு அரைத்து
சலித்து வைக்கவும். பச்சரிசியை ஒரு மணி நேரம் ஊற வைத்து அரைத்துச் சலித்துக் கொள்ளவும். சலித்த அரிசி மாவில் மேல் மாவுக்கு ஒரு கைப்பிடி அளவு எடுத்துக் கொண்டு
மீதமுள்ள மாவைத் தனியாக வைக்கவும். தேங்காய்த் துருவலை பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு பவுலில் பயறு மாவு
தனியாக எடுத்து வைத்துள்ள அரிசி மாவு
தேங்காய்த் துருவல்
ஏலக்காய்ப் பொடி மற்றும் உப்பு சேர்த்து கலந்து வைக்கவும்.
மேல் மாவுக்கு கொடுத்துள்ளவற்றுடன் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி
தோசை மாவைவிட சற்று நீர்க்கக் கரைத்து வைக்கவும்.
சீனியுடன் ஒரு கப் தண்ணீர் ஊற்றி மெல்லிய கம்பிப் பதத்தில் பாகு காய்ச்சிக் கொள்ளவும்.
கலந்து வைத்துள்ள மாவுக் கலவையில் சூடான சீனிப் பாகை ஊற்றி பிசையவும் (பாகு முழுவதும் மாவுக்கு சரியான அளவில் இருக்கும்).
பிசைந்த மாவை பெரிய உருண்டையாக உருட்டி
சப்பாத்திப் பலகையில் மாவு தூவி கால் அங்குல அளவு தடிமனாக தட்டி
டயமண்ட் வடிவில் வெட்டிக் கொள்ளவும்.
இதே போல் மீதமுள்ள மாவிலும் தடிமனாக தட்டி வெட்டி வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி
காய்ந்ததும் வெட்டிய துண்டுகளை கரைத்து வைத்துள்ள மாவில் தோய்த்தெடுத்து எண்ணெயில் போட்டு
பொன்னிறமாக பொரிதெடுக்கவும். (மாவைச் சிறு உருண்டைகளாக உருட்டிப் போட்டும் பொரித்தெடுக்கலாம்).
சுவையான வெட்டுப் பலகாரம் (பயறு பலகாரம்) & பயறு உருண்டை தயார்.