வெஜ் கொத்து சப்பாத்தி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

நறுக்கிய சப்பாத்தி துண்டுகள் - 3 கப் பொடியாக நறுக்கிய வெங்காயம் - அரை கப் தக்காளி - அரை கப் கேரட் - கால் கப் முட்டை கோஸ் - கால் கப் குடை மிளகாய் - கால் கப் பீன்ஸ் - கால் கப் காலிஃப்ளவர் - கால் கப் பச்சை மிளகாய் - 4 வெங்காயத் தாள் - 2 தேக்கரண்டி கொத்தமல்லித் தழை - சிறிது மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி எண்ணெய் உப்பு

செய்முறை:

தேவையான அனைத்துப் பொருட்களையும் தயாராக எடுத்து வைக்கவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் மற்றும் உப்புப் போட்டு வதக்கவும்.

வெங்காயம் நன்கு வதங்கியதும் நறுக்கிய தக்காளி மற்றும் நீளமாக நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து குழைய வதக்கவும்.

அதனுடன் தூள் வகைகளைச் சேர்த்துப் பிரட்டவும்.

பிறகு நறுக்கிய காய்கறிகளை ஒவ்வொன்றாகச் சேர்த்து வதக்கவும்.

காய்கள் வெந்தவுடன் சப்பாத்தி துண்டுகளைச் சேர்க்கவும்.

அனைத்தும் ஒன்றாகச் சேரும்படி கிளறிவிட்டு கொத்தமல்லித் தழை தூவி இறக்கவும்.

சுவையான வெஜ் கொத்து சப்பாத்தி தயார். ரைத்தாவுடன் பரிமாறவும்.

குறிப்புகள்: