வெஜிடபிள் சில்லி
தேவையான பொருட்கள்:
வேகவைத்த கொண்டைக்கடலை - இரண்டு கோப்பை
வேகவைத்த கிட்னி பீன்ஸ் - இரண்டு கோப்பை
கேனில் அடைக்கப்பட்ட தக்காளி - ஒரு கேன் 398ml
நறுக்கிய கேரட் - இரண்டு கோப்பை
நறுக்கிய மஷ்ரூம் - இரண்டு கோப்பை
செலரி - ஒரு கோப்பை
வெங்காயம் - ஒரு கோப்பை
சிவப்பு, மஞ்சள் நிற குடைமிளகாய் - தலா ஒரு கோப்பை
சில்லி பவுடர் - இரண்டு தேக்கரண்டி
சீரகத்தூள் - அரை தேக்கரண்டி
மிளகுத்தூள் - ஒரு தேக்கரண்டி
தனியாத்தூள் - ஒரு தேக்கரண்டி
ஒரிகனோ பவுடர் - அரை தேக்கரண்டி
நறுக்கிய பூண்டு - ஒரு தேக்கரண்டி
பார்ஸ்லி தழை - அரைக்கோப்பை
பிரிஞ்சி இலை - இரண்டு
எண்ணெய் - கால்கோப்பை
செய்முறை:
காய்கறிகள் அனைத்தும் ஒரே சீரான அளவில் நறுக்கி வைக்கவும்.
அடிகனமான ஒரு பாத்திரத்தில் எண்ணெயை ஊற்றி பூண்டு, வெங்காயம், செலரி ஆகியவற்றை ஒன்றாகப் போட்டு வதக்கவும்.
பிறகு காய்கறிகளை ஒவ்வொன்றாகப் போட்டு வதக்கவும்.
அதை தொடர்ந்து கேனில் உள்ள பொருளை உடைத்து ஊற்றி நன்கு கலக்கிவிடவும்.
பிறகு கொண்டைக்கடலையும், கிட்னி பீன்ஸையும் போட்டு எல்லாத்தூளையும் போட்டு நன்கு கலக்கிவிடவும்.
பின்பு கடலை வெந்த நீரை இரண்டு கோப்பை ஊற்றி பார்ஸ்லி மற்றும் பிரிஞ்சி இலையைப் போட்டு கொதிக்க விடவும். பிறகு அடுப்பை சிம்மில் வைத்து வேகவைக்கவும்.
அடிப்பிடிக்காமல் அடிக்கடி கிளறி விட்டு, சுமார் ஒரு மணி நேரம் அடுப்பில் வைத்திருந்து இறக்கி சூடாக பரிமாறவும்.
இந்த சுவையான சுலபமான சில்லி டிஷ் செய்து குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருந்து, மத்திய உணவிற்கு எடுத்து செல்ல ஏற்றதாயிருக்கும்