விளாம்பழ சாலட்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

விளாம்பழம் (மசித்த) - 2 கப்

வெல்லம் (இலங்கை சர்க்கரை) - ஒரு கப்

இஞ்சி+ உள்ளி (பூண்டு) விழுது - ஒரு தேக்கரண்டி

உப்பு + மஞ்சள் தூள் - சிறிதளவு

கடுகு - ஒரு தேக்கரண்டி

பச்சைமிளகாய் - 2

வெங்காயம் - அரைப்பாகம்

சீரகம் - ஒரு தேக்கரண்டி

செய்முறை:

விளாம்பழம், உப்பு, மஞ்சள் தூள், வெல்லம் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து வேக வைக்கவும்.

பிறகு கீழே இறக்கி வைத்து இஞ்சி+பூண்டு (உள்ளி) விழுதை சேர்க்கவும்.

கடுகு, பச்சைமிளகாய், வெங்காயம், சீரகம் ஆகியவற்றை தாளித்து பிறகு சேர்க்கவும்.

விளாம்பழ சாலட் தயாராகி விட்டது. இப்போது இதனைப் பரிமாற முடியும்.

குறிப்புகள்:

வைட்டமின் சி நிறைந்த குளிர்ச்சியான சாலட், தடிமலை வராமல் தடுக்க உதவும்.

இது குளிர்ச்சியானது மழைக்காலங்களில் வைத்தியரின் ஆலோசனைப்படி உண்ணவும்.