வாழைப்பூக் கறி
தேவையான பொருட்கள்:
வாழைப்பூ - 500 கிராம் மைசூர் பருப்பு - 50 - 75 கிராம் வெங்காயம் - 25 கிராம் பச்சை மிளகாய் - 2 பூண்டு - 4 பற்கள் பால் - 100 மி.லி தேசிக்காய் - பாதி கறிவேப்பிலை - சிறிது உப்பு - தேவையான அளவு
செய்முறை:
வெங்காயம் மற்றும் பூண்டை சிறுத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை இரண்டாக கீறிக் கொள்ளவும்.
கனமான கூர்மையான கத்தியால்
வாழைப்பூவை படத்தில் உள்ளபடி வெட்டி அடையாளப்படுத்தவும்.
பின்னர்
பலகையில் வைத்து மிகவும் சிறு துண்டுகளாக நறுக்கி எடுக்கவும். (மீண்டும் மீண்டும் இதேப்போல் செய்து வெட்டி எடுக்கவும்)
நறுக்கி வைத்திருக்கும் வாழைப்பூவை ஒரு பாத்திரத்தில் போட்டு ஒரு தேக்கரண்டி உப்பு போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி 10 நிமிடம் ஊற வைக்கவும்.
பின்னர் வாழைப்பூவை பிழிந்து எடுத்து ஒரு கடாயில் போட்டு அதனுடன் வெங்காயம்
பூண்டு
பச்சை மிளகாய் மற்றும் பருப்பை கழுவி தண்ணீர் வடித்து போடவும்.
எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து பிரட்டி 200 மி.லி தண்ணீர் ஊற்றி மூடி வைத்து வேக விடவும்.
வெந்ததும் பால் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து உப்பு சரிபார்த்து தேவைப்பட்டால் சேர்க்கவும்.
பால் கொதித்ததும் அடுப்பிலிருந்து இறக்கி வைத்து தேசிக்காய் பிழிந்து பரிமாறவும். சுவையான வாழைப்பூ கறி ரெடி. அறுசுவையில் இலங்கை சமையல் குறிப்புகள் வழங்கிவரும் திருமதி. அதிரா அவர்கள் செய்து காண்பித்த குறிப்பு இது. நீங்களும் செய்து பார்த்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும்.