வாழைக்காய் சம்பல்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

வாழைக்காய் - 2

சின்ன வெங்காயம் - 10

பச்சை மிளகாய் - 2

துருவிய இஞ்சி - 1 தேக்கரண்டி

தேங்காய்ப்பூ - 2 மேசைக்கரண்டி

கறிவேப்பிலை - 5 இலை

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

வாழைக்காயை கழுவி காம்பையும், நுனிப்பகுதியை வெட்டி அகற்றி விடவும்.

பின்பு சிறு சிறு துண்டுகளாக வெட்டவும்.

சிறிதளவு தண்ணீர் சேர்த்து அவிக்கவும்.

வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலையை பொடியாக நறுக்கவும்.

அவித்த வாழைக்காயை நன்கு மசிக்கவும்.

மசித்தவற்றுடன் வெட்டிய வெங்காயம், மிளகாய், கறிவேப்பிலை, உப்பு, தேங்காய்ப்பூ சேர்த்து கலக்கவும்.

விரும்பினால் எலுமிச்சம்பழப்புளி சேர்க்கவும்.

குறிப்புகள்:

வாழைக்காய் தோலில் தான் சத்து அதிகம். அதனால் தோலுடன் செய்யும் சம்பல்.

இது சோற்றுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.