வனிலா ஐஸ்கிறீம்
தேவையான பொருட்கள்:
கட்டிப்பால் - 1/4 கப்
பால்மா - 1/2 கப்
தண்ணீர் - 3/4 கப்
வனிலா எஸன்ஸ் - 1/4 தேக்கரண்டி
செய்முறை:
கட்டிப்பாலினுள் 1/4 கப் தண்ணீர் விட்டு வனிலா சேர்த்து கரைக்கவும்.
பால்மாவை மீதி 1/2 கப் தண்ணீரில் கட்டி இலாமல் கரைக்கவும்.
இரண்டையும் தனித்தனியே ஃபிரீஸரினுள் 1/2 மணித்தியாலம் வைத்து எடுக்கவும்.
ஒரு பெரிய பாத்திரத்தில் குளிர் தண்ணீர் நிரப்பி அதனுள் பால்மா கரைசல் பாத்திரத்தை வைத்து பீட்டரால் அல்லது கரண்டியால் நன்கு பொங்க பொங்க அடிக்கவும்.
பின்னர் இதை கட்டிப்பால் கரைசலினுள் சேர்த்து மெதுவாக கலக்கவும். அடிக்க வேண்டாம்.
பின்னர் ஒரு தட்டையான பாத்திரத்தில் கலவையை ஊற்றி ஃபிரீஸரில் 1 - 11/2 மணித்தியாலங்கள் வைத்து எடுக்கவும்.
மீண்டும் பீட்டரால் அல்லது கரண்டியால் பொங்க பொங்க அடிக்கவும்.
ஃபிரீஸரில் வைத்து இறுகியதும் எடுத்து பரிமாறலாம்.
சுவையான ஐஸ்கிறீம்.
குறிப்புகள்:
இரண்டாம் முறை அடித்ததும் குறைந்தது 21/2 மணித்தியாலங்களாவது ஃபிரீஸரில் வைக்கவும். விரும்பினால் நட்ஸ், டூட்டி ஃபுரூட்டி சேர்க்கலாம். வனிலாவுக்கு பதில் வேறு பழ எஸன்ஸும் சேர்த்து அதே நிறங்களும் சேர்க்கலாம்.