லெமன் ரைஸ் பிலாஃப்
தேவையான பொருட்கள்:
அரிசி - இரண்டு கோப்பை
எலுமிச்சைச்சாறு - கால் கோப்பை
நறுக்கிய வெங்காயம் - கால் கோப்பை
வெண்ணெய் - மூன்று மேசைக்கரண்டி
எண்ணெய் - இரண்டு மேசைக்கரண்டி
வெஜிடபிள் பிராத் (சூப்)அல்லது
சிக்கன் பிராத் - நான்கு கோப்பை
நறுக்கிய கொத்தமல்லி - ஒரு மேசைக்கரண்டி
நறுக்கிய டில்(Dill)தழை - இரண்டு மேசைக்கரண்டி
பிரிஞ்சி இலை - இரண்டு
உப்புத்தூள் - இரண்டு தேக்கரண்டி
மிளகுத்தூள் - அரை தேக்கரண்டி
துருவிய எலுமிச்சை தோல் - இரண்டு தேக்கரண்டி.
துருவிய ஆரஞ்சு தோல் - இரண்டு தேக்கரண்டி
செய்முறை:
எலுமிச்சை பழத்தின் சாற்றை பிழிவதற்கு முன்பாக, அதன் தோலை துருவிக் கொண்டு பிறகு வெட்டி சாற்றைப் பிழிந்துக் கொள்ளவும்.
அரிசியை கழுவி நீரை வடித்துக் கொள்ளவும். ஊற வைக்க வேண்டாம்.
அடிகனமான பாத்திரத்தில் வெண்ணெயையும், எண்ணெயையும் கலந்து ஊற்றி சூடாக்கவும். அதில் வெங்காயம் பிரிஞ்சி இலையைப் போட்டு வதக்கவும். வெங்காயம் சற்று வதங்கினால் போதும். சிவக்க தேவையில்லை.
பிறகு கொத்தமல்லியைப் போட்டு வதக்கி அரிசியைப் போட்டு கிளறவும்.
பிறகு அரிசியை ஒரு நிமிடத்திற்கு நன்கு வதக்கிய பிறகு பிடித்தமான சூப்பை ஊற்றி எலுமிச்சைச்சாறு மற்றும் உப்பையும் சேர்த்து கலக்கி விட்டு கொதிக்க விடவும்.
நன்கு கொதித்து சூப்பின் அளவு குறைந்து அரிசி பாதி வேக்காடாக இருக்கும் பொழுது, மூடியைப் போட்டு அடுப்பின் அனலைக் குறைத்து வைக்கவும்.
அதன் பிறகு ஒரு பத்து நிமிடம் வரை அடுப்பில் வைத்திருந்து இறக்கி விடவும்.
மூடியைத் திறக்காமல் மேலும் பத்து நிமிடம் வரை வைத்திருக்கவும்.
பிறகு முள்ளுக் கரண்டியின் உதவியால் பரிமாறும் தட்டில் கொட்டி முதலில் மிளகுத்தூளை தூவவும்.
பிறகு டில் தழையைத்தூவி, அதனுடன் துருவிய எலுமிச்சை ஆரஞ்சுத்தோலை மேலாகப் போட்டு அலங்கரித்து பரிமாறவும்.
இந்த லெமென் ரைஸ் பார்பிக்யூவிற்கு ஏற்ற சுவையான பக்க உணவு