லக்னோ ஆலு டிக்கி
தேவையான பொருட்கள்:
உருளை கிழங்கு -4
வெள்ளை கொண்டைகடலை- 1/4 கப்
உப்பு-தேவைக்கு
மிளகாய் தூள்- 1 ஸ்பூன்
பானிபூரிக்கு பயன்படுத்தும் பூரி- 10
கொத்தமல்லி- தூவுவதற்கு
வெங்காயம்- 4 (பொடியாய் நறுக்கியது)
வெண்ணெய்- பொரிக்க தகுந்த அளவு
தகி மசாலாவிற்கு
தயிர்- 100
சீனி-25 கிராம்
இம்லி சட்னிக்கு
புளி- நெல்லிக்காய் அளவு
வெல்லம்-25 கிராம்
மிளகாய் தூள்- 1/4 ஸ்பூன்
உப்பு-சிறிதளவு
அமெச்சூர் பவுடர்- சிறிதளவு
செய்முறை:
உருளையும் ஊற வைத்த கொண்டைகடலையும் தனிதனியாக அவிக்கவும்
உருளையை தோல்நீக்கி அத்துடன் கொண்டைகடலையும் உப்பும் சேர்த்து மசிக்கவும்.
சிறு உருண்டை எடுத்து கையில் வட்ட வடிவில் தட்டவும். அதன் மேல் மிளகாய் தூள் தடவவும்.
தோசைகல்லில் வெண்ணெய் சூடாக்கி கபாப்களை இரு புறமும் வேகும் படி பொரித்தெடுக்கவும். ஆலு டிக்கி ரெடி
கெட்டி தயிரில் சீனி கலந்து நன்கு கலக்கவும், தயிர் சட்னி தயார்
புளியை ஊற வைத்து கெட்டியான விழுதாக தயார் செய்யவும்
பானில் சிறிது நீர் சேர்த்து வெல்லபாகு தயார் செய்யவும்.
அரைகம்பி பதத்திற்கு வந்ததும் புளி விழுது,மிளகாய் தூள், உப்பு, அமெச்சூர்பவுடர் சேர்த்து கலக்கி இறக்கவும். இம்லிசட்னி தயார்
சின்ன தட்டில் பூரி ஒன்று உடைத்து அதன் மேல் இரு ஆலு டிக்கி வைத்து கொத்தமல்லி,வெங்காயம் தூவவும். தகி மசாலா(லெஸ்ஸி), இம்லி சட்னி தனிதனியாக வைத்து பரிமாறவும்.
குறிப்புகள்:
லக்னோ தெருவோரக்கடைகளில் ஓலை தட்டில் ஆலுடிக்கி இதே முறையில் வைத்து லெஸ்ஸியும், இம்லி சட்னி ஊற்றி தருவார்கள். வெறுமனே சாப்பிட்டாலும் அதிக சுவையாக இருக்கும்.