ரோஸ்மெரி டீ (1)
0
தேவையான பொருட்கள்:
ரோஸ்மெரி நெட்டுகள் - 4
டீ பாக்ஸ் - 2
சீனி & பால் - அவரவர் சுவைக்கேற்ப
செய்முறை:
அலம்பிய ரோஸ்மெரி நெட்டுக்களை ஒரு மைக்ரோவேவ் கிண்ணத்திலிட்டு ஒன்றரை கோப்பை கொதிநீர் விட்டு மூடி, குறைந்தது பத்து நிமிடங்கள் ஊறவிடவும்.
இலையின் வாசனை ஊறி நீரும் மெல்லிய பச்சை நிறமாக மாறிவரும் போழுது, இலைகளை நீக்கிவிட்டு வடிகட்டிய நீரை மீண்டும் கொதிநிலைக்குக் கொண்டுவரவும்.
இரண்டு பாக் தேயிலையைச் சேர்த்து கடுமையான தேநீராக தயாரித்துக் கொள்ளவும்.
தேவைக்கு பால், சீனி சேர்த்துக் கலக்கினால் சுவையான, புத்துணர்ச்சியூட்டும் ரோஸ்மெரி டீ தயார்.
குறிப்புகள்:
ரோஸ்மெரி டீ தலைவலி, தடிமல் வேளைகளில் இதம் தரும்.
பூக்கள், மொட்டுகள் & பூச்சிகள் இல்லாத இளம் ரோஸ்மெரி நெட்டுகளை மட்டும் தெரிந்துகொள்ளவும்.