ரொட்டி பால் (குழந்தைகளுக்கு)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கோதுமை மாவு - அரை கப்

சூடான பால் - கால் டம்ளர் (ரொட்டியில் ஊறவைக்க)

சூடான வெந்நீர் - மாவு குழைக்க தேவையான அளவு ( கால் டம்ளருக்கு சிறிது அதிகம்)

சர்க்கரை - ஒரு தேக்கரண்டி

பட்டர் (அ) நெய் - ஒரு தேக்கரண்டி

பொட்டுக்கடலை மாவு - ஒரு மேசைக்கரண்டி

உப்பு - கால் தேக்கரண்டி

மிளகுத் தூள் - அரை பின்ச்

செய்முறை:

கோதுமை மாவு, பொட்டுக்கடலை மாவு, மிளகுத் தூள், சர்க்கரை எல்லாம் சேர்த்து கலக்கவும்.

வெந்நீரில் நெய், உப்பு போட்டு மாவில் ஊற்றி ஒரு ஃபோர்க்கால் நன்கு கிளறவும்.

பிறகு எல்லாம் ஒன்று சேர்ந்து வரும் போது நன்கு பிசைந்து பத்து நிமிடம் ஊறவைக்கவும்.

கொசுவம் வைத்து ரொட்டிகளாகவோ சப்பாத்தியாகவோ சுட வேண்டும்.

சப்பாத்தி என்றால் ஆறு வரும், ரொட்டி என்றால் மூன்று வரும்.

சுட்டு முடித்ததும் அதை சின்ன சின்ன துண்டுகளாக பிச்சி போட்டு சூடான பாலை ஊற்றி ஊறவைத்து குழந்தைகளுக்கு ஊட்டவும்.

குறிப்புகள்:

நல்ல பசி தாங்கும், எலும்பு வலுவடையும், முகத்தில் ஒரு ஷைனிங்கும் வரும். வாரம் ஒரு முறை கொடுத்து பாருங்கள்.