ரொட்டி ஜாலா

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மைதா - ஒரு கப் தேங்காய் பால் - ஒரு கப் உப்பு மஞ்சள் தூள் - சிறிது முட்டை - 1 (அ) 2

செய்முறை:

தேங்காய் பாலில் உப்பும் மஞ்சளும் சேர்க்கவும்.

இதில் முட்டையை உடைத்து ஊற்றவும். முட்டை சிறியதாக இருப்பின் இரண்டு முட்டைகள் பயன்படுத்தவும்.

இதை நன்றாக கலந்து கொள்ளவும். இத்துடன் சிறிது சிறிதாக மைதா மாவை கொட்டி கலந்து விடவும்.

கெட்டி இல்லாமல் கொட்டி நன்றாக கலந்து தோசை மாவு பதத்துக்கு கொண்டு வரவும். தேவையானால் சிறிது நீர் சேர்க்கலாம்

அல்லது மாவு பதம் வந்ததும் நிறுத்தி விடவும்.

ரொட்டி ஜாலா செய்ய என மோல்டுகள் கிடைக்கும்

அவை இல்லாத பட்சத்தில் இது போல் ஓட்டைகள் உள்ள சாஸ் பாட்டில் பயன்படுத்தலாம்.

கலந்து வைத்த மாவை பாட்டிலில் ஊற்றி தயார் செய்யவும்.

தோசை கல் காய்ந்ததும் மாவை வலை போல் ஊற்றவும்.

இதை மூடி போட்டு வேக விட்டு எடுக்கவும். திருப்பி போட தேவை இல்லை.

இது போல் செய்தவற்றை சுருட்டியோ அல்லது முக்கோண வடிவில் மடித்தோ பரிமாற வைக்கலாம். எல்லா வகை மசாலா

குருமாவோடும் சூப்பராக இருக்கும்.

குறிப்புகள்: