ரைஸ் க்ரிஸ்பி பார்ஸ்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

வெண்ணெய் - 2 மேசைக்கரண்டி மார்ஷ்மெல்லோ க்ரீம் - 5 (அ) 6 oz சாக்லெட் ரைஸ் க்ரிஸ்ப்பி சீரியல் - 3 கப் ஸ்பிரிக்கிள்ஸ் - அலங்கரிக்க

செய்முறை:

தேவையானவற்றை தயாராக எடுத்து வைக்கவும். ஒரு ட்ரே எடுத்துக் கொண்டு

அதன் அளவிற்கு ஏற்றாற்போல பார்ச்மென்ட்/பட்டர் பேப்பர்

கட் செய்து ட்ரேயில் போட்டு தயாராக வைக்கவும். (அல்லது) நாண்ஸ்டிக் ஸ்ப்ரே அடித்தும் ட்ரேயை தயார் செய்துக்கொள்ளலாம்.

முதலில் ஒரு அடி கனமான பாத்திரத்தில் வெண்ணெயை போட்டு உருக்கவும். அடுப்பில் தீ குறைவாக இருக்கவேண்டும்.

வெண்ணெய் உருகியதும்

இதனுடன் மார்ஷ்மெல்லோ க்ரீம் சேர்த்து

கலந்து விடவும்.

சிறிது நேரத்தில் க்ரீமும் நன்கு உருகி

வெண்ணெயுடன் சேர்ந்து காணப்படும்.

இப்போது அடுப்பை அணைத்துவிட்டு

ரைஸ் க்ரிஸ்ப்பீசை கொட்டி வேகமாக கலக்கவும்.

ஏற்கனவே தயார் செய்து வைத்திருக்கும் ட்ரேயில் கொட்டி

சமப்படுத்தி விடவும். (சமப்படுத்தும்போது கலவை கரண்டியில் ஒட்டும் வாய்ப்பு உள்ளது. கரண்டியில் சிறிது நாண்ஸ்டிக் ஸ்ப்ரே அடித்துக் கொண்டு சமப்படுத்த சுலபமாக இருக்கும்.)

மேலே அலங்கரிக்க ஸ்பிரிக்கிள்ஸ் தூவி விடவும்.

ஒரு 15 - 20 நிமிடங்களில்

லேசாக சூடு ஆறி செட் ஆகிவரும்போது

கத்தியால்

விருப்பமான அளவுகளில் வில்லைகளாக கட் செய்து விடவும்.

மேலும் சற்று சூடு ஆறியதும்

ட்ரேயில் இருந்து எடுத்து வேறு ஒரு செர்விங் ப்ளேட்டில் வைத்து பரிமாற

சுவையான ரைஸ் க்ரிஸ்பி பார்ஸ் ரெடி! எளிதில் தயாரித்துவிடக்கூடிய இந்த பார்ஸ் குழந்தைகளின் மிக விருப்பமான ஒரு ஸ்நாக்.

குறிப்புகள்: