ரைஸ் கேக் வித் வெஜிடெபிள்ஸ்
தேவையான பொருட்கள்:
கொழுக்கட்டை (Rice cake) - 2 கப் (300 கிராம்) பெரிய வெங்காயம் - பாதி கேரட் - ஒன்று முட்டைகோஸ் - 3 மேசைக்கரண்டி (நறுக்கியது) மிளகாய் விழுது (Hot chilli paste) - ஒரு தேக்கரண்டி (காரத்திற்கு ஏற்றவாறு கூட்டி அல்லது குறைத்து கொள்ளவும்) தக்காளி கெட்சப் - ஒரு மேசைக்கரண்டி வெங்காயத்தாள் (Leek/Scallion) - ஒன்று சர்க்கரை - ஒரு தேக்கரண்டி பூண்டு - 2 பல் பொரித்த வெள்ளை எள் - ஒரு தேக்கரண்டி எண்ணெய் - காய்கறிகளை வதக்க தேவையான அளவு
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் நீரை கொதிக்க வைத்து அதில் ரைஸ் கேக்கை (கொரியாவில் ரெடிமேடாகவே கிடைக்கும்) போட்டு வேக வைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். இந்திய முறைப்படி பச்சரிசியில் கொழுக்கட்டை செய்து தயாராக வைத்து கொள்ளவும்.
வெங்காயம்
கேரட் இவைகளை சுத்தம் செய்து நறுக்கி வைக்கவும். (சற்று தடிமனான துண்டுகளாகவே நறுக்கவும்.)
தக்காளி கெட்சப் மற்றும் மிளகாய் விழுதை கலந்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும். பின்னர் அதனுடன் சர்க்கரையை சேர்த்து கடைசியில் எள்ளை சேர்க்கவும்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் வெங்காயம்
பூண்டு
வெங்காயத்தாள்
முட்டைக்கோஸ்
கேரட் இவைகளை போட்டு வதக்கவும். (காய்கறிகள் சுமாராக வதங்கினால் போதுமானது)
பின்னர் அதில் கொழுக்கட்டைகளையும்
தயாரித்து வைத்திருக்கும் சாஸையும் சேர்த்து 5 நிமிடம் வேக வைத்திருந்து இறக்கவும்.
சுவையான கொரிய வகை டோக்போக்கி (ரைஸ் கேக் வித் வெஜிடபிள்ஸ்) தயார். மாலை நேர சிற்றுண்டிக்கு ஏற்ற உணவு இது.