ருலங் அலுவா (Rulang aluwa)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

1. ரவை - 1/2 கப்

2. ப்ரவுன் சர்க்கரை - 1/4 கப்

3. நெய் / வெண்ணெய் - 1 மேஜைக்கரண்டி

4. பேரீச்சம் பழம் - 5

5. முந்திரி - 5

6. உப்பு - 1 சிட்டிகை

7. வெனிலா எஸன்ஸ் - 1/2 தேக்கரண்டி

8. பால் - 1/2 கப்

செய்முறை:

பாலை கொதிக்க வைத்து சூடாக வைக்கவும்.

முந்திரி மற்றும் பேரீச்சம் பழத்தை பொடியாக நறுக்கி வைக்கவும்.

ரவையை கடாயில் போட்டு சிவக்க வறுக்கவும்.

இதில் வெண்ணெய் விட்டு கலந்து பின் சர்க்கரை, பொடியாக நறுக்கிய பேரீச்சை, முந்திரி எல்லாம் கலந்து 2 நிமிடம் கிளறவும்.

பின் சூடான பாலை விட்டு கலந்து மூடி விடவும்.

5 நிமிடம் சிறு தீயில் வைத்து கிளறி எடுத்து நெய் தடவிய தட்டில் கொட்டி பரப்பி அழுத்தி விடவும்.

ஆறியதும் துண்டுகளாக்கவும். சுவையான ருலங் அலுவா தயார்.

குறிப்புகள்:

இவர் இலங்கையை சேர்ந்தவர். இதில் எல்லா வகையான நட்ஸும் பயன்படுத்தலாம். ரவை முழுவதுமாக வெந்திருக்காது. வெள்ளை புள்ளிகளாக தெரியும். ஆனால் முழுவதும் வறுத்து விடுவதால் நல்ல சுவையாக இருக்கும். ஏறக்குறைய நம்ம ஊர் கேசரி போல தான்... ஆனால் நெய் இருக்காது, இனிப்பு அதிகம் இருக்காது, ரவை முழுவதும் வெந்து குழையாது. 1/2 கப் ரவைக்கு 1/2 கப் தான் பால் சேர்க்கிறோம். நட்ஸ் மற்றும் ப்ரவுன் சர்க்கரை தான் இதில் தனி சுவை கொடுக்கும்.