ரியா ஃபோளி
தேவையான பொருட்கள்:
மைதா - ஒரு கப் முட்டை - ஒன்று மஞ்சள் தூள் உப்பு ஃபில்லிங் செய்ய: ஸ்மோக்டு டூனா மீன் - ஒன்று (அ) 2 துண்டுகள் உருளைக்கிழங்கு - ஒன்று வெங்காயம் - கால் பாகம் கிதியோ மிருஸ் - பாதி வறுத்த கறி தூள் - ஒரு தேக்கரண்டி தேங்காய் பால் - 2 மேசைக்கரண்டி இஞ்சி
பூண்டு - ஒரு தேக்கரண்டி பட்டை
ஏலக்காய் - சிறிது தாளிக்க பந்தன் / ரம்பை இலை - 2 சிறு துண்டுகள் எண்ணெய் - 2 தேக்கரண்டி உப்பு
செய்முறை:
மைதாவுடன்
முட்டை
மஞ்சள் தூள்
உப்பு சேர்த்து கலக்கவும்.
இதனுடன் தேவையான நீர் விட்டு நீர்க்க கரைத்து வைக்கவும்.
மீனை சுத்தம் செய்து பொடித்து வைக்கவும். உருளைக்கிழங்கை வேக வைத்து மசிக்கவும். உருளைக்கிழங்கு சேர்க்காமல் செய்வதென்றால் 2 மீன் துண்டுகள் பொடிக்கவும்.
வெங்காயம்
கிதியோ மிருஸ்
இஞ்சி
பூண்டை பொடியாக நறுக்கவும்.
பாத்திரத்தில் எண்ணெய் விட்டு பட்டை
ஏலக்காய்
பந்தன் / ரம்பை இலை தாளிக்கவும். பின் வெங்காயம்
கிதியோ மிருஸ்
இஞ்சி
பூண்டு சேர்த்து வதக்கவும்.
பின் உப்பு
கறி தூள் சேர்த்து பிரட்டவும்.
தூள் வாசம் போனதும் தேங்காய் பால் விட்டு உருளைக்கிழங்கு மற்றும் பொடித்த மீன் சேர்த்து நன்றாக பிரட்டி வதக்கி இறக்கவும். ஃபில்லிங் தயார்.
தவாவை சூடாக்கி மாவை விட்டு ஆப்பம் போல மெல்லியதாக பரவும்படி செய்யவும்.
சிறுதீயில் ஒரு பக்கமாக வேக விட்டு எடுத்து விடவும். ஒரு ஓரமாக ஃபில்லிங் வைக்கவும்.
பிரியாமல் இருக்க படத்தில் உள்ளது போல முதலில் மடித்து கொள்ளவும்.
அப்படியே ரோல் செய்தால் மாலத்தீவு ஸ்பெஷல் ரியா ஃபோளி தயார்.