ராஜ்மா பீன்ஸ் புறிட்டோ

off off off off off 0

தேவையான பொருட்கள்:

புறிட்டோ - ஒரு பாக்கெட் ராஜ்மா பீன்ஸ் - ஒரு கப் வெண்ணெய் - ஒரு தேக்கரண்டி வெங்காயம் நறுக்கியது - ஒரு கப் தக்காளி நறுக்கியது - ஒரு கப் லெடுஸ் நறுக்கியது - ஒரு கப் வெள்ளை சாதம் - ஒரு கப் உப்பு - தேவையான அளவு டொமேட்டோ கெட்சப் - சிறிதளவு

செய்முறை:

தேவையான பொருட்களை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

ராஜ்மா பீன்ஸை 12 மணி நேரம் ஊற வைத்து

பின்னர் 5 விசில் வரும் வரை உப்பு சேர்த்து குக்கரில் வேக வைத்து அதனை வெண்ணெயுடன் சேர்த்து நன்றாக மசித்து கொள்ளவும்.

பின்னர் ஒரு புறிட்டோவை எடுத்து ஒரு நிமிடம் மைக்ரோவேவ் செய்து அதன் மீது ஒரு தேக்கரண்டி வெள்ளை சாதம்

மசித்த ராஜ்மா

ஒரு தேக்கரண்டி நறுக்கிய வெங்காயம்

ஒரு தேக்கரண்டி பொடியாக நறுக்கிய தக்காளி

டொமேட்டோ கெட்சப் சிறிதளவு சேர்க்கவும்.

அதனுடன் நறுக்கிய லெடுஸ் சிறிதளவு சேர்த்துக் கொள்ளவும்.

பின்னர் படத்தில் காட்டியவாறு அழுத்தமாக ரோல் செய்துக் கொள்ளவும்.

ஈஸியான ராஜ்மா பீன்ஸ் புறிட்டோ தயார். இது குழந்தைகள் மற்றும் பெரியவர்களின் லஞ்ச் பாக்ஸ்க்கு உகந்தது.

குறிப்புகள்: