யோகர்ட் டிப்பிங் சாஸ்
0
தேவையான பொருட்கள்:
தயிர் - ஒரு கோப்பை
துருவிய இங்லீஷ் குக்கும்பர் - ஒரு கோப்பை
நறுக்கிய பூண்டு - அரை தேக்கரண்டி
வெங்காயத்தாள் - கால் கோப்பை
நறுக்கிய புதினா இலை - கால் கோப்பை
எலுமிச்சைச்சாறு - ஒரு மேசைக்கரண்டி
தேன் - ஒரு மேசைக்கரண்டி
உப்புத்தூள் - கால் தேக்கரண்டி
செய்முறை:
வெள்ளரிக்காயில் உப்பைச் சேர்த்து பத்து நிமிடம் ஊறவைத்து அதிலுள்ள நீரை பிழிந்து எடுத்து விடவும்.
பிறகு அதில் தயிர் மற்றும் தேவையான அனைத்துப் பொருட்களையும் சேர்த்து நன்கு கலக்கி குளிர்சாதனப்பெட்டியில் வைத்து குளிர்விக்கவும்.
குறைந்தது ஒரு மணிநேரம் கழித்து வெளியில் எடுத்து பரிமாறவும்.
இந்த சாஸ்ஸை சாலட்களுடன் மற்றும் காய்கறிகளுக்கு டிப்பிங் சாஸாக பரிமாறலாம்.