யம்மி கத்தரிக்காய் சாலட்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கத்தரிக்காய் - 1

மிளகாய் தூள் - 1 ஸ்பூன்

மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்

வெங்காயம் - 1

தக்காளி - 1

பச்சை மிளகாய் - 1

பூண்டு - 1பல்

மல்லி,புதினா - சிறிது

உப்பு - தே.அளவு

எண்ணெய் - பொரிக்க

எலுமிச்சை சாறு - 1ஸ்பூன்

செய்முறை:

கத்தரிக்காயை கழுவி பின் அதை வட்ட வட்டமாக வெட்டிக் கொள்ளவும்.

அதில் மிளகாய் தூள்,மஞ்சள் தூள்,உப்பு போட்டு எண்ணெயில் 2 பக்கமும் போட்டு பொரித்தெடுக்கவும்.

இதை ஒரு தட்டில் பரவலாக வைக்கவும்.

வெங்காயம்,தக்காளி,பச்சை மிளகாய்,பூண்டு,மல்லி,புதினா அனைத்தையும் மிக்ஸியில் அல்லது கைய்யால் சுற்றும் மெஷினில் வைத்து ஒரு சுற்று விட்டு எடுக்கவும்.

இந்த கலவையில் கொஞ்சம் உப்பு,எலுமிச்சை சாறு போட்டு பிரட்டவும்.

இதை தட்டில் பரவலாக வைத்திருக்கும் கத்தரிக்காய் மீது பரப்பினாற்போல் ஊற்றவும்.

குறிப்புகள்:

அரைக்கும் பொருள்கள் எல்லாம் கொரகொரப்பாக அரைக்கனும்.இது பிரியாணியுடன் சாப்பிட நல்லா இருக்கும்.