மோர்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

தயிர் - 4 கப்

தண்ணீர் - 2 கப்

ஐஸ்கட்டி (சிறியது) - 6

உப்பு - தேவையான அளவு

பச்சைமிளகாய் (சிறிய வட்டமாக வெட்டியது) - 2

பெரியவெங்காயம் (சிறிய துண்டுகளாக வெட்டியது) - ஒன்று

செய்முறை:

தயிருடன் தண்ணீர் விட்டு நன்றாக கரைக்கவும். கரைத்த கலவையுடன் வெட்டிய வெங்காயம், உப்பு, வெட்டிய பச்சைமிளகாய், ஐஸ்கட்டி போட்டு கலக்கவும்.

கலக்கிய இக்கலவையே மோர் இதனை அழகான கப்பில் ஊற்றி பரிமாறவும் .

குறிப்புகள்:

மோர் இலங்கையில் வெயில் காலங்களுக்குரிய பிரபல்யமான பானம் அத்துடன் இது ஒரு வகை குளிர்மையான பானம். எச்சரிக்கை - ஆஸ்துமா நோயாளர், சர்க்கரைநோயாளர், இருதய நோயாளர் வைத்தியரின் ஆலோசனைப்படி மோர்

அருந்தவும்.