மொஹல் பிரியாணி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மட்டன் - அரைக் கிலோ பாஸ்மதி (அ) சீரக சம்பா அரிசி - அரைக் கிலோ பிரிஞ்சி இலை - 3 பட்டை - சிறிய துண்டு ஏலக்காய் - 3 கிராம்பு - 3 சோம்பு - ஒரு தேக்கரண்டி வெங்காயம் - 3 பச்சை மிளகாய் - 4 கெட்டி தயிர் - அரை கப் குங்குமப் பூ - சிறிதளவு உப்பு - தேவையான அளவு மல்லி இலை - ஒரு கட்டு புதினா - கால் கட்டு பூண்டு - 50 கிராம் இஞ்சி - 25 கிராம் காய்ந்த மிளகாய் - 4 பாதாம் (அ) முந்திரி - 20 காய்ந்த திராட்சை - 15 வினிகர் - 2 தேக்கரண்டி பால் - கால் கப் நெய் - கால் கப்

செய்முறை:

மட்டனை சுத்தம் செய்து சிறு சிறுத் துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். அரிசியை கழுவி ஊற வைக்கவும். இஞ்சி

பூண்டு

காய்ந்த மிளகாய்

பாதாமை அரைத்து வைக்கவும்.

நெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

பொன்னிறமானதும் தனியே எடுத்து வைக்கவும்.

அதே நெய்யில் பிரிஞ்சி இலை தாளித்து அரைத்த விழுதை சேர்க்கவும்.

பச்சை வாசனை அடங்கியதும் மட்டன் சேர்த்து கிளறவும். ஐந்து நிமிடம் வதக்கி வினிகர்

மட்டனுக்கு தேவையான உப்பு மற்றும் அரை கப் தண்ணீர் சேர்த்து மூடி வைக்கவும். தீயை குறைத்து வைக்கவும்.

மல்லி இலை

புதினா

பட்டை

ஏலக்காய்

கிராம்பு

சோம்பு

பச்சை மிளகாய் சேர்த்து அரைத்து வைக்கவும். தயிர் கெட்டியாக இல்லையென்றால் ஒரு மஸ்லின் துணியில் வடிகட்டிக் கொள்ளவும். இப்பொழுது அரைத்தவற்றை தயிருடன் சேர்த்து கலக்கவும்.

மட்டன் ஒரளவுக்கு வெந்த பிறகு

அதில் உள்ள கிரேவி திக்கான பின் தயிர் கலவையை சேர்க்கவும். பத்து நிமிடம் கழித்து இறக்கவும்.

தனியே வேறு ஒரு பாத்திரத்தில் அரிசியை முக்கால் பதமாக வடித்து வைக்கவும். வடித்தவுடன் வாய் அகலமான பாத்திரத்தில் கொட்டி விடவும். குங்கும பூவை சிறிதளவு பாலில் கலக்கி சாதத்தில் ஆங்காங்கே ஊற்றவும். திராட்சையை தனியே நெய்யில் வறுத்து சாதத்தில் கொட்டவும்.

அவனை 300 F (150 C) முற்சூடு செய்யவும். இப்பொழுது ஒரு பெரிய ட்ரேவில் ஒரு லேயர் சாதம் போட்டு அதன் பின்னர் மட்டன் கலவை போட்டு பின்னர் வறுத்த வெங்காயம் போடவும். சிறிதளவு பாலை ஊற்றவும். இதே போல் எத்தனை லேயர் வருகிறதோ அது வரையில் செய்யவும்.

மேலே ஒரு ஃபாயில் போட்டு சீல் செய்து அவனில் வைக்கவும். (அறுசுவையில் உள்ள வேறு முறையிலும் கூட தம் போடலாம்!)

ஒரு மணி நேரம் கழித்து திறக்கவும். இப்பொழுது சுவையான மொஹல் பிரியாணி ரெடி.

குறிப்புகள்: