மொராக்கன் லாம்ப்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

லாம்ப் இறைச்சி (lamb) - அரைக்கிலோ

சிக்கன் ஸ்டாக் - இரண்டு கோப்பை

வெங்காயம் (shallots) - கால் கிலோ

மிளகுத்தூள் - ஒரு தேக்கரண்டி

பட்டை தூள் - அரை தேக்கரண்டி

மிளகாய்தூள் - அரை தேக்கரண்டி

மஞ்சள்தூள் - அரை தேக்கரண்டி

நட்மெக்(ஜாதிக்காய்) - கால்தேக்கரண்டி

இஞ்சி தூள் - அரைதேக்கரண்டி

தேன் - இரண்டு தேக்கரண்டி

ஆரஞ்சு பழச்சாறு - கால் கோப்பை

விதை நீக்கிய புரூன்ஸ் (உலர்ந்த ப்ளம்ஸ்) - பத்து

(அ)உலர்ந்த திராட்சை - கால் கோப்பை

எண்ணெய் - கால் கோப்பை

உப்புத்தூள் - இரண்டு தேக்கரண்டி

செய்முறை:

ஆட்டுக்கறியை சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

வெங்காயத்தின் தோலை உரித்து கழுவிக் கொள்ளவும். நறுக்க வேண்டாம். இந்த வகை வெங்காயம் சில கடைகளில் சிறிய பொதிகளில் போட்டு வைத்திருப்பார்கள்.

புரூன்ஸை தண்ணீரில் போட்டு ஊறவைத்துக் கொள்ளவும்.

பிறகு அடிகனமான பாத்திரத்தில் எண்ணெயை காயவைத்து கறியைப் போட்டு வதக்கவும்.

ஐந்து நிமிடத்திற்கு வதக்கி விட்டு தனியாக தட்டில் எடுத்து வைக்கவும்.

பிறகு வெங்காயத்தைக் கொட்டி அதையும் ஐந்து நிமிடம் நன்கு வதக்கி தனியாக எடுத்து வைக்கவும்.

பாத்திரத்தில் தங்கியுள்ள எண்ணெயை கொட்டி விட்டு மீண்டும் அடுப்பில் வைத்து சிக்கன் ஸ்டாக்கை ஊற்றி கொதிக்க விடவும்.

பிறகு அதில் வதக்கிய கறியைப் போட்டு அதனுடன் புரூன்ஸ், ஆரஞ்சு ஜூஸ் மற்றும் வெங்காயத்தைத் தவிர மற்ற எல்லாப் பொருட்களையும் சேர்த்து நன்கு கலக்கி விட்டு கொதிக்க விடவும்.

கொதிக்கும் பொழுது அடுப்பின் அனலைக் குறைத்து வைத்து மூடியைப் போட்டு வேக விடவும்.

பிறகு ஒரு அரைமணி நேரம் கழித்து ஆரஞ்சு பழச்சாற்றை ஊற்றி தொடர்ந்து வேக விடவும். கறி நன்கு வெந்தவுடன் வதக்கியுள்ள வெங்காயம் மற்றும் ஊற வைத்துள்ள புரூன்ஸை போடவும்.

மேலும் ஒரு பதினைந்து நிமிடங்களுக்கு அடுப்பில் வைத்திருந்து இலேசாக கலக்கி விட்டு இறக்கி விடவும்.

இந்த சுவையான ஸ்டூவ்வை பிடித்தமான ரொட்டி வகைகளுடன் சூடாக பரிமாறவும்.

குறிப்புகள்: